ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Thursday, March 6, 2014

ஒருதலையாகவேநேசித்தல் பல போதும்
ஒருதலையாகவே இருந்து முடிகின்றது

திருப்பப் பட்ட ஒலிகளாய்….
அனுசரனையற்ற சொற்களாய்….
உதாசினப் பார்வையின் வீச்சாய்….
ஏற்காத அலைபேசியின் அழைப்பாய்….
வாசிக்கப் படாத வரிகளாய்...

நேசித்தல் பல போதும்
ஒருதலையாகவே இருந்து முடிகின்றது


10 comments:

 1. திருப்பப் பட்ட ஒலிகளாய்….
  அனுசரனையற்ற சொற்களாய்….
  உதாசினப் பார்வையின் வீச்சாய்….
  ஏற்காத அலைபேசியின் அழைப்பாய்….
  வாசிக்கப் படாத வரிகளாய்......
  என்று
  ஒருதலை நேசிப்பின் உதாரணங்கள் ரசிக்கவைத்தாலும்
  ரணப்படும் உள்ளம் பரிதாபம் கொள்ளவைக்கிறது..!

  ReplyDelete
  Replies
  1. பரிதாபத்துக்குரியவர்கள் ஒருதலையாக நேசிப்பவர்கள் இராஜராஜேஸ்வரி. நன்றிகளுடன்

   Delete
 2. சிரமம் தான்... ஆனால் அது தான் வழிகாட்டி...!

  ReplyDelete
  Replies
  1. எது தனபாலன் சார் வழிகாட்டி? ஒருவரின் நேசிப்பை உதாசினப் படுத்துவ்தா?

   Delete
 3. ஒரு தலையாகவே
  ஒருவர் அடையும் துயரை
  அழகாக அடுக்கியிருப்பதை
  பாராட்டுகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. வருகையும் கருத்தும் இனிமை. நன்றி Jeevalingam Kasirajalingam

   Delete
 4. ஆம் , ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் ஏதோ ஒரு சமயம் யாரோ ஒருவரால் நிராகரிக்கப்பட்டுவிட்ட. ஏமாற்றம் நீறுபூத்த நெருப்பாகப் பதுங்கியிருப்பதை மறுக்க முடியாது.

  ReplyDelete
  Replies
  1. என் கருத்தை ஏற்றமைக்கு நன்றி

   Delete
 5. வாசிக்கப்படாத வரியின் ... பகிரப்படாத வலி. என்னவோ செய்தது. மனதை.

  ReplyDelete
  Replies
  1. சிவா, எப்படி இருக்கீங்க. நலமா?

   Delete