ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Wednesday, April 20, 2016

காதல் என்ன குறுக்கெழுத்துப் போட்டியா


காதல் என்ன 
குறுக்கெழுத்துப் போட்டியா
விடுபட்ட கட்டங்களை
நான்கு ஐந்து ஆறு 
என்று
எழுத்துகளைக் கொண்டு நிரப்பி விட
இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
கீழிருந்து மேல்
மேலிருந்து கீழ்
மட்டுமல்ல
கட்டங்களை விட்டு விட்டு
நிரப்பினாலும்
அதில்
உன் பெயரை மட்டும்தான்
எழுத முடியும்
அந்தப் பெயருக்குப்
பொருத்தமில்லாத கட்டங்கள்
காலியாகவே
இருந்து விட்டுப் போகட்டுமே!

4 comments:

 1. நானாயிருந்தால் காலிகட்டங்களிலே கூட மானே தேனே ன்னு நிரப்பி இருப்பேன் !!.
  வித்தியாசமான சிந்தனை ஆதிரா!

  ReplyDelete
 2. ஆமாம் . காலியாக இருந்தாலும் கவனிக்கப்படும். கருப்படித்த கட்டங்களாய் இல்லாதிருத்தல் வேண்டும்.
  சிந்தனையைத் தூண்டும் கவிதை

  ReplyDelete
  Replies
  1. சும்மா...... ஒரு கிறுக்கல்தான்

   Delete