Wednesday, October 20, 2010

நானும் கல்லல்ல....


சேமிக்க நினைத்த
கனங்களைச் செலவழித்தேன்
நட்டமெனத் தொலைக்க வேண்டிய
தருணங்களை நினைவுகளாக்கி
நெஞ்சு கணக்கச் சேமித்தேன்

கனங்கள் நழுவி
நாட்களாய்
மாதங்களாய் நீள
நினைவலைகளில்
கரைந்து கொண்டிருக்கின்றது
ஆயுள்!
நீ கொடுத்த உறுதிமொழிகளும்
மெல்ல மெல்ல
மூழ்கிக் கொண்டிருக்கிறது

சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்

சிதைந்த கணக்கை
வெட்டுவதும்
சீராக்கி ஒட்டுவதும்
கணிப்பொறிக்கு மட்டுமே
கிட்டிய வரம்!

உடைந்த சில்லுகளைச்
செதுக்கி வார்ப்பதற்கு
நானும் கல்லல்ல,
நீயும்
கணபதி ஸ்தபதி அல்ல!

2 comments:

  1. வரிகள் பேசுகின்றன தோழி

    ReplyDelete
  2. ///நானும் கல்லல்ல,
    நீயும்
    கணபதி ஸ்தபதி அல்ல!///

    ஆனாலும் வடித்து விட்டீர்களே.
    ஒரு கவிச் சிலையை.
    அழகாய்

    ReplyDelete