Thursday, October 21, 2010

கல்லல்ல..


http://img522.imageshack.us/img522/3994/vm78.jpg 

சேமிக்க நினைத்த
கனங்களைச் செலவழித்தேன்
தொலைக்க வேண்டிய
தருணங்களை 
நினைவுகளாக்கி
நெஞ்சு கணக்கச் 
சேமித்தேன்

கனங்கள் நழுவி
நாட்களாய்
மாதங்களாய் 
வருஷங்களாய் நீள
நினைவலைகளில்
கரைந்து கொண்டிருக்கின்றது
ஆயுளும்
நீ கொடுத்த உறுதிமொழிகளும்
மெல்ல மெல்ல!

சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்!

சிதைந்த கணக்கை
வெட்டுவதும்
சீராக்கி ஒட்டுவதும்
கணிப்பொறிக்கு மட்டுமே
கிட்டிய வரம்!

உடைந்த 
இதயச் சில்லுகளைச்
செதுக்கி வார்ப்பதற்கு
நானும் கல்லல்ல,
நீயும் 
கைதேர்ந்த
கணபதி ஸ்தபதி அல்ல!




22 comments:

  1. //சிதைந்த கணக்கை
    வெட்டுவதும்
    சீராக்கி ஒட்டுவதும்
    கணிப்பொறிக்கு மட்டுமே
    கிட்டிய வரம்!//

    நிதர்சனம்!

    //உடைந்த சில்லுகளைச்
    செதுக்கி வார்ப்பதற்கு
    நானும் கல்லல்ல,
    நீயும்
    கைதேர்ந்த
    கணபதி ஸ்தபதி அல்ல!//

    ஓஹோ அப்படியா வேணாங்க வேணாம்!

    ReplyDelete
  2. என்ன வசந்த்? இப்படியெல்லாம் கவைதை கிறுக்க வேண்டாம்னு சொல்றீங்களா? தங்கள் இனிய வரவுக்கு, பதிவுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  3. சே சேஅப்டில்லாம் சொல்லலை ஆதிரா!

    ReplyDelete
  4. கரைந்து கொண்டிருக்கின்றது
    ஆயுளும்
    நீ கொடுத்த உறுதிமொழிகளும்
    மெல்ல மெல்ல!

    ReplyDelete
  5. ungal bloggil irrunthu thirudi eduthu poivittean intha meluguvarthiiyai


    he he policela complaint koduthudatheengoooooooooo

    ReplyDelete
  6. அன்புள்ள வினு,
    முதல் முறையும் இரண்டாவது முறையும் என் சிறு குடிலுக்கு வருகை புரிந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி.
    மெழுகுத்திரி தியாகத்தின் சின்னம். அது திருட்டுப் போனதற்கு போலீஸை அழைத்தால் அதன் பெருமையும் சேர்ந்தே குறைவு படும்.

    மேலும் அது இங்கு வெற்று ஒளி வீசிக் கொண்டிருந்தது. உங்கள் வலைப்பூவில் த்த்துவத்தை அல்லவா விதைத்துக் கொண்டு இருக்கிறது. அதற்கும் மீண்டும் நன்றி வினு.

    ReplyDelete
  7. முதல் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமாரந்த நன்றி கஸ்தூரி ராஜன். மீள் வருகையை எதிர்நோக்கி...அன்புடன்..

    ReplyDelete
  8. அழகான கவிதை ஆதிரா!

    ReplyDelete
  9. தங்கள் தொடர் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க் நன்றி சுந்தரா. இன்று இரவுதான் வலைப்பூக்களுக்கு உலா வர வேண்டும். தங்கள் வலையில் தென்றலைச் சுவாசிக்க..ரசிக்க.. மீண்டும் வருகையை எதிர்நோக்கி..நன்றியுடன்..

    ReplyDelete
  10. வார்த்தை தவறிய கண்ணம்மாக்கள்..
    மார்பு துடிக்க கவியெழுதும் பாரதிகள்..
    பார்க்குமிடமெங்கும் பாவைகள் தெரிவது போய்,
    பாரதிகளே தெரிகிறார்கள்...

    காதலே போ! போ!!

    ReplyDelete
  11. //காதலே போ! போ!!// ஹை ஜி இந்த தலைப்பு நல்லா இருக்கே..

    எங்கும் வார்த்தை சாலங்கள்... அத்து மீறல்கள்... முடிவில் கண்ணீர்க்கோலங்கள் கன்னங்களில்... உலகை நினைத்தால் மனது வெம்பி வெடித்து விடும் போல இருக்கிறது ஜி. அவலங்களைக் கண்டு நம்மால் ஒன்றும் செய்ய முடியாத் கையாலாகாத்தனம் கொதிப்புடன் கவிதையாக..
    தாங்கள் வரவை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து.. இன்றுதான் விடை கிடைத்தது..
    வரவுக்கும் மனக்குமுறலைக் கொட்டியமைக்கும் மிக்க நன்றி ஜி.

    ReplyDelete
  12. அன்பையும் காதலையும் மீறிய கணக்குகள் ஆயிரம் இருக்கின்றன... என்னம்மா செய்வது? இது பெரும்பாலும் உலகத்தின் வழி!எல்லாவற்றுக்கும் எவர்க்கும் வார்த்தைகள் தானே வேண்டியிருக்கிறது..ஆனாலும் இவர்களே உலகம் அல்ல.. அவைகளும் வார்த்தைகள் அல்ல.. நல்லவர்களும் அதிகம் இருக்கத் தான் செய்கிறார்கள்.
    எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டு நாமே அன்பு மயமாய் மாறி விட்டால் போதும்.. பாதை தெளிந்து விடும்..
    பதிலுக்கு காக்க வைத்ததற்கு ஸாரி ஆதிரா..

    ReplyDelete
  13. கணபதி ஸ்தபதி! நல்ல கற்பனை.

    ReplyDelete
  14. மோகன்ஜியோட 'காதலே போ! போ!!'வுக்கு விளக்கம்: காதல் போயின் காதல் போயின் காதல்.

    ReplyDelete
  15. அவருடைய கைவண்ணம் அழகு சிந்திக்கொண்டிருக்கிறதே வள்ளுவராக.. வாழ்த்தாமல்.. அந்தக்காலத்துல பாரதி சொன்னாரு ”காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல்”
    என்று இந்தக் காலத்தில் “ஒரே காதல் ஊரில் இல்லையடா.. தாவணி போனால் சல்வார், டாக்டரு போனா நர்சு என்று நாளொரு மேனியும் மாற்றிக்கொண்டு..

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அப்பாதுரை.

    ReplyDelete
  16. கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள்

    http://usetamil.forumotion.com

    ReplyDelete
  17. கல்லல்ல.. உங்கள் மனமும் கல்லல்ல...

    கல்கண்டாய் உங்கள் இதயமும்... கவிதையும் சுவையாக ரசிக்கும்படி...

    சுகத்தையும் சோகத்தையும் வெளிக்காட்ட... கவிதையில் எழுத்துகளுக்கு மட்டும் சாத்தியம்...
    உணர்வில் கண்ணீர்துளிகள் மட்டுமே சாட்சி...

    // சிதைந்த கணக்கை
    வெட்டுவதும்
    சீராக்கி ஒட்டுவதும்
    கணிப்பொறிக்கு மட்டுமே
    கிட்டிய வரம்!//

    கணிப்பொறி, இறைவன் நமக்களித்த வரம். வரத்திற்கு வரம் அளித்தவன் நமக்கு அளிக்காமலா போவான்? அல்லது ஏதாவது வழிக்காட்டாமலா போவான் கணக்கை சீராக்கி நேர் செய்ய?


    // உடைந்த சில்லுகளைச்
    செதுக்கி வார்ப்பதற்கு
    நானும் கல்லல்ல,
    நீயும்
    கைதேர்ந்த
    கணபதி ஸ்தபதி அல்ல! //

    முழு கல்லை செதுக்கி சிலை வடிக்கும் கலையை இறைவன் எல்லாருக்கும் அளிக்காமல் போயிருக்கலாம்...

    உடைந்த கல்லையும் சிற்பமாக பார்க்கும் பாங்கை பலபேருக்கும் இறைவன் கொடுத்துள்ளான்.

    உடைந்த சில்லுகளை பொக்கிஷமாய் உயிராய் காத்திடும் மனத்தினையும் சிலபேருக்கு அருளித்துள்ளான் இறைவன்.

    ReplyDelete
  18. அன்பு வாசன்,

    //கல்கண்டாய் உங்கள் இதயமும்... கவிதையும் சுவையாக ரசிக்கும்படி...//
    உங்கள் கனிமொழியில் என் மனம் மகிழ்ந்தது.

    சுகத்தையும் சோகத்தையும் வெளிக்காட்ட...
    உணர்வில் கண்ணீர்துளிகள் மட்டுமே சாட்சி...

    ச(சா)த்திய வாக்கு..

    கணிப்பொறி அலாவுதீனின் அற்புத விளக்கு. நமக்கு?

    உடைந்த சில்லுகளைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கும் உத்தமர்களை எதிர்நோக்கி சில்லுகளும்... அளித்த அந்த ஆண்டவுனுக்கு நன்றி சொல்லி...

    கல்லையும் கரைய வைக்கும் தங்களின் மென்மையான கருத்துரையில் கரைந்து கொண்டே... ஒரு சிறிய நன்றி..

    ReplyDelete
  19. அன்புள்ள தமிழர்களின் சிந்தனைக்களம்,
    முதன்முறை வருகைக்கும், இனி வரப்போகிற வருகைக்கும், தங்களின் வாசிப்புக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  20. சில வரிகள் மனதை வருடி செல்கிறது....
    நினைவுகளின் சுழற்சியில் மூழ்கி போகிறேன்...
    அந்த வரிகளை குறிப்பிட்டு மற்றவரிகளின் அழகை குறைக்க விரும்பவில்லை

    ReplyDelete
  21. வருக வருக அழகிய பேசும் விழியே,
    தங்கள் முதல் வருகையிலேயே என் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள். நினைவுகளின் சுழற்சி நம்மை மீள விடாமல் ஆக்கிவிடும். கவனம் தேவை.

    அழகான தங்கள் கருத்துரைக்கு அன்பான நன்றிகள்.

    ReplyDelete