Monday, October 25, 2010

மந்திரம்..

http://www.redbookmag.com/cm/redbook/images/LP/woman-on-floor-writing-1-0110-mdn.jpg
உன்னை உச்சரிப்பதனால்
என் நாவுக்கும்
எழுதுவதால்
என் எழுதுகோல் நாவுக்கும்
ஆனந்தம் அதிகமாவதை
நீ எவ்வாறு அறிவாய்!!




18 comments:

  1. அலைபேசியில் அலைகழிக்கும் அன்புக் காதலா! உன்-
    தலைஎழுத்தை அல்லவா எழுதிக் கொண்டிருக்கிறேன்?

    ReplyDelete
  2. நெஞ்சை தொட்ட கவிதை

    ReplyDelete
  3. இறைவனின் நாமத்தை உச்சரிப்பதையும், எழுதுவதையும் இறைவனுக்கு தெரியாமல் போகுமா? அல்லது அவனுக்கும் ஆனந்தம் வரமால் போகுமா?

    அவன் அறிந்ததை, இம்மானிட பிறவி உருவெடுத்து வந்து உங்கள் உள்ளத்தையும் குளிர செய்வான்... உங்களையும் உணர செய்வான்...

    மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

    ஸ்ரீ ஸ்ரீனிவாசா, ஸ்ரீசைல வாசா,
    ஸ்ரீ வேங்கடேசம் மனஸா ஸ்மராமி…

    ReplyDelete
  4. very funny, ப்ரியமுடன் வசந்த், தஞ்சை.வாசன்
    >>>காதல் காலம்! ரைட்டு!
    >>>இறைவனின் நாமத்தை உச்சரிப்பதையும், எழுதுவதையும்

    ReplyDelete
  5. Dear Kasthuri raja,
    Thank you for for your visit and comment.

    ReplyDelete
  6. அன்பு வசந்த்,
    இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்?
    வருகைக்கு மிக்க நன்றி வசந்த்.

    ReplyDelete
  7. அன்பு ஜி,
    //அலைபேசியில் அலைகழிக்கும் அன்புக் காதலா! உன்-
    தலைஎழுத்தை அல்லவா எழுதிக் கொண்டிருக்கிறேன்?//
    அலைபேசிக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு..
    நன்றி ஜி.

    ReplyDelete
  8. அன்பு யாதவன்,
    மிக்க நன்றி தங்கள் வ்ருகைக்கு. உங்கள் வலைப்பூவின் லின்க் கொடுத்தால் நாங்கள் வர எளிதாக இருக்கும். என் வலைப்பூவில் இருந்து தங்க்ள் வலைப்பூவுக்கு வர இயலவில்லை.

    ReplyDelete
  9. மனத்தையும், காலத்தையும் பொறுத்து மந்திரங்கள் மாறுவது இயல்புதானே வாசன்.
    //ஸ்ரீ ஸ்ரீனிவாசா, ஸ்ரீசைல வாசா,
    ஸ்ரீ வேங்கடேசம் மனஸா ஸ்மராமி… //
    அந்தப் பெண்ணும் அதைத்தான் எழுதிக்கொண்டிருப்பாளோ என்னவோ..

    //அவன் அறிந்ததை, இம்மானிட பிறவி உருவெடுத்து வந்து உங்கள் உள்ளத்தையும் குளிர செய்வான்... உங்களையும் உணர செய்வான்...//

    தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி வாசன்.

    ReplyDelete
  10. அன்பு அப்பாதுரை,
    ஆமா பாருங்க சார், நான் எதோ கிறுக்கிப் போட்டா இவங்க ரெண்டு பேரும் கலாட்டா செய்றாங்க..

    ஹலோ ப்ரியமுடன் வசந்த், வாசன் எனக்கும் சப்போட்டுக்கு ஆளுங்க இருக்காங்களாக்கும்.. ஜாகரதை.. ஆமா...

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அப்பாதுரை அவர்களே.

    ReplyDelete
  11. கவிதை அருமை சகோ
    என் பார்வையில் உங்கள் காகிதக்கேள்விக்கு பதில் இங்கே சகோ..

    எழுதுகோலின்
    கண்ணீர் என்று
    நனைந்தேன்
    கசக்கி வீழ்த்திய
    என்னை
    கரம்கொண்டு
    கிழியாமல்
    பிரித்தெடுத்து
    உன் நா
    உற்சாகத்துடன்
    உச்சரித்ததில்
    உணர்ந்தேன்
    உன் கவி
    சுமக்கும் பாக்யம்
    கிட்டியதென்று...........


    உங்க கவிதை அருமை சகோ

    ReplyDelete
  12. //கரம்கொண்டு
    கிழியாமல்
    பிரித்தெடுத்து
    உன் நா
    உற்சாகத்துடன்
    உச்சரித்ததில்
    உணர்ந்தேன்//
    முதல் வருகையிலேயே மனம் கவர்ந்த கவி வரிகளுடன் பாதம் பதித்த சகோதரன் தினேஷ்குமாருக்கு என் அன்பும் என்றும் உரியது.
    எத்த்னை அழகான் கவிதை. இந்தக் கவிஞனைக் காணும் பாக்கியம் கிட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி. மீண்டும் மீண்டும் தங்களின் வருகையை காண் ஆவலுடன்...நன்றியுடன்...

    ReplyDelete
  13. அப்பப்ப வந்து இப்படி ஊக்கப்படுத்துவதுக்கு நன்றிங்கோ.. தமிழ்ப்பார்க்...

    ReplyDelete
  14. பார்ரா!!!!
    எப்புடீ????
    ரைட்டு!!!
    நல்லா இருக்கு :-)

    ReplyDelete
  15. முதல் முதல்ல வந்திருக்கீங்கல்ல... அதுதான் மந்திர உச்சரிப்பெல்லாம் உங்க காதுல கேக்குது.. அது ஒரு ஏக்ட்டுதான்.. வுடுங்க.. வுடுங்க..

    மிக்க நன்றி..ஜி.

    ReplyDelete