Saturday, November 19, 2011

உருப்பட எத்தனிக்கையில்...

http://cdn1.wn.com/pd/99/13/59aaa0ebc89248e982e9515fa5d9_grande.jpg

பாசப் பள்ளத்தில் சறுக்கி

ஆசை மேட்டில் இடறி

கோப மலை முகட்டில் முட்டி மோதி,

சிற்றின்பச் சாக்கடையில் மூழ்கி

அனுபவச் சக்கரத்தில்

  குயவனின் கைப்பட்ட

களிமண்ணாய்

வளைந்து நெளிந்து

முழுவதுமாக

உருப்பட எத்தனிக்கையில்

முடிந்தே விடுகிறது 

வாழ்க்கை

14 comments:

  1. எந்தக் குயவனின் களிமண். ?அந்த நாள் அக்குயவன் கை செய்த பிழைக்கு இந்த நாளில் ஏழையெனை ஏனோ தூற்றுகின்றீர் என்று ஒரு முறை நான் எழுதியது நினைவுக்கு வருகிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. வாழ்வை நறுக்கெனச் சிலவரிகளிலேயே புரியவைக்கும் அழகான வரிகள்

    ReplyDelete
  3. உண்மைதான் வாழ்க்கை புரிய ஆரம்பிக்கும் போது முடிந்து விடுகிறது

    அருமையான வரிகள் அக்கா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. முழுவதுமாக

    உருப்பட எத்தனிக்கையில்

    முடிந்தே விடுகிறது

    வாழ்க்கை/

    நிதர்சன வரிகள்..

    ReplyDelete
  5. தானாக முடிந்து போவது இல்லை வாழ்க்கை...
    நாமாக முடித்து கொள்வதே இந்த வாழ்க்கை...

    இதுதான் வாழ்க்கை என்று சுருக்கிக்கொள்(ல்)வது குறை...
    இதுவும் வாழ்க்கை என்று கருதிவாழ்வது நிறை....

    ReplyDelete
  6. வரிகள் உயிருடைத்து ஆதிரா
    வாழ்க்கையை உட்கொண்டு
    வலியினை வார்த்தைகளாக்கி
    வழிமுறை சுட்டும் இதனை
    வாசித்தேன்...யோசித்தேன்..
    விழிகளில் ஈரம் ...
    அது உங்களின் வெற்றியே...

    ReplyDelete
  7. ஆகா வாழ்க்கை பற்றி இத்தனை அருமையாய் ... கவிதை.
    நீர்க்குமிழி வாழ்க்கையை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் மேடம்

    ReplyDelete
  8. சில வரிகளில் வாழ்க்கையின் எதார்த்தத்தை புட்டு புட்டு வச்சுட்டீங்க

    ReplyDelete
  9. வாழ்க்கை எனப்படுதல் வாழ்வதற்கே அக்குயவன்
    பாழ்க்கைபோல் போய்விடுதல் பாழ்

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. மிக்க நன்றி ஜி.என்.பி ஐயா. தாமதமான நன்றி நவிலலுக்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  12. மிக்க நன்றி அம்பலத்தார், இசையன்பன், வாசன், இராஜராஜேஸ்வரி, சிவகுமரன், ராஜி, தயாளன் சார்.அனைவரும் தாமதமான நன்றி நவிலலுக்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  13. aditi;amma i mis u lot i thought ur saying summa but.... if i hurted u enna manichidunga ur my inspiration amma amma.....

    ReplyDelete
    Replies
    1. அன்பு சீதளா,

      என்னம்மா இது ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறாய் என் குழந்தைகள் மீது எனக்கு ஏன் கோபம். நீ என்னை ஒரு போதும் வருந்தச் செய்யவில்லை. செய்தாலும் நீ என் குழந்தை. சரி பள்ளி எப்படி போகிறது. வகுப்புகள் தொடங்கி விட்டார்களா
      இலக்கை எட்டுவதே குறிக்கோளாக இருக்க் வேண்டும். இப்போதிருந்தே கவனம் கொள்ள வேண்டும். வாழ்த்துகள்.

      Delete