ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Saturday, August 18, 2012

தத்துவத்தை உயிர்ப்பிக்க!
எழும் ஓசையால்
சூழும் மாசினால்
சூறாவளியாய்ச் சூழ்ந்து வரும்
அழிவுகளைச்
சமன்செய்து கொள்ள முடியாது
கையற்று சுழலும்
பூமியாய் நான்

எரிமலையை
இதயத்துள்
கொந்தளித்துக் கொண்டு,,,

உயிரை மூடிய 
ஒற்றை அங்கியும்
ஓசோனால்
கிழிபட்டுக்கொண்டிருக்கும்
அபாயத்தைத் தடுக்க முடியாத
வானமாய் நீ

சேர்க்க முடியாத
இதயப் பிளவை 
விழிநூலால் 
தைத்துக்கொண்டு...

இந்த உலகுக்கும்
நம் உறவுக்கும்
பதில் சொல்லவேண்டிய
வி(ம)தியோ
வான மங்கைகளின்
நாட்டியத்தில்
களித்துக்கொண்டு
சொர்க்கத்தில்....
பேராசையில் மூழ்கி

கடைசி மூச்சுவரை
வாழ்ந்து விடுவதுதான்
வாழ்க்கைத் தத்துவம்!

அந்த நொடிவரை
காதலுடன்
வாழ்ந்து விடுவோம்
பூமியும் வானமுமாய்

இந்த
உலகத்துடன் சேர்ந்து
தத்துவத்தை உயிர்ப்பிக்க!


4 comments:

 1. இயற்கையை காப்போம்!அன்புடன் எந்நாளும் வாழ்வோம் கடைசி நிமிடங்கள் வரை...

  ரம்ஜான் சிறப்பு கவிதை படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு, கருத்துக்கு மிக்க நன்றி ஆயிஷா

   Delete