Tuesday, August 7, 2012

கன்னக் கதுப்பிலும் நீயே....



வயலோரம்
வளைந்தோடும்
தென்றல்
நிலவின்
தேன் சாரலுடன்
உன் வாசத்தைச்
சுமந்து வருகிறது

இசை கூட்டி

இதழ்மீட்டி
பொன்வண்டுகள்
குளிர்செய்கின்றன
மலர்களின்
செவிமடல்களில்
உன் சொற்களால்

இதழ்பிரியாது

நாணிக்கவிழ்கின்றன
நறுமுகைகள்
அவற்றின்
கன்னக் கதுப்பிலும்
நீயே
புன்னகைக்கிறாய்
ஒளி நிலவாய்!

7 comments:

  1. அருமையான கவிதை...

    கன்னக்கதுப்பு என வரவேண்டுமோ?

    ReplyDelete
    Replies
    1. நானும் இப்போதுதான் தலைப்பைப் பார்த்து அதிர்ந்தேன். என்னடா இப்படிப் போட்டிருக்கிறோமே என்று. பிழைக்கு மன்னிக்கவும்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  2. மிக்க நன்றி வரலாற்றுச் சுவடுகள்

    ReplyDelete
  3. இந்த பதிவை-
    வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

    வலைச்சரத்திற்கு -
    வருகை தாருங்கள்!
    தலைப்பு;
    கவிதை......

    http://blogintamil.blogspot.sg/

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள சீனி,
      இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். உடனே ஓடோடிப் போனேன். பார்த்தேன். பதிவும் இட்டேன். என் கவிதையை அறிமுகப்படுத்திய அன்புக்கு மனமார்ந்த நன்றி.

      உங்களால் மற்ற பதிவர்களின் கவிதையையும் படித்தேன். ரசித்தேன். நன்றி சீனி.

      Delete
  4. அழகான கவிதை சகோ...இதனை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்...ஒரு முறை சென்று பாருங்கள்
    http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_23.html

    ReplyDelete
    Replies
    1. அன்பு சிட்டுக்குருவி. உங்களால்தான் சேதி தெரிந்து கொண்டேன். உடனே போனேன். பார்த்தேன். பதிவும் இட்டேன்.மிக்க நன்றி.

      Delete