ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Monday, August 20, 2012

தந்தை மகற்காற்றும் நன்றி....…அன்று 
எல்லா பாடங்களிலும் 
தான் பெற்ற 
முதல் மதிப்பெண்களை...

ஆட்டத்தில்
அள்ளிக் குவித்த 
வெள்ளிக் கோப்பைகளை...

ஆறாவது முறையும்
சுதந்திரதின கொண்டாட்ட
மேடையில் பேசி
அடர் மழையாய்
வாங்கிய கைத்தட்டலை...

அத்துணை ஆசிரியர்களும்
அன்பு மகள் என்று
அள்ளியணைத்ததை...

தாயிடம்
சொல்லிச் சொல்லி
இன்புற்றுக் கொண்டிருந்தது,

தந்தையின் 
மோகத் தவத்துக்காய்

தான்
எய்ட்ஸ் வரம்பெற்று...
எழுத்தறிவு வரம் பெறாத..

இருளுலகில் வாழும்
அந்தக் குழந்தை! 


11 comments:

 1. Replies
  1. மிக்க நன்றி கவி அழகன்

   Delete
 2. Replies
  1. மிக்க நன்றி சென்னைப் பித்தன்

   Delete
 3. இருள்
  வலி
  சிறை
  வேதனையான விஷயம் தான் கவிதாயினி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி செய்தாலி

   Delete
 4. Replies
  1. மிக்க நன்றி வரலாற்றுச் சுவடுகள்

   Delete
 5. அருமையான விழிப்புணர்வு! உங்களை என் வலைதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன், "விடை தேடும் காதல்" என் காதல் கவிதையை படித்து உங்களின் கருத்தை பதியவும். அன்புடன் ஆயிஷாபாரூக்..

  ReplyDelete
 6. அழகான கவியை கடைசியில் வலிகளுடன் முடித்துள்ளீர்களே....
  நல்லதொரு விழிப்புணர்வு கவிதை

  ReplyDelete