Thursday, September 13, 2012

முடமாகிப் போன கனவுகள்!




புத்தகங்களைக் கட்டிக்கொண்டு
உறங்கிக் கொண்டிருந்தது
அந்த
வளர்ந்த குழந்தை!

அன்று  மட்டும்…..
புதுப் புத்தகம் வாங்க
வேகமாக ஓடாமல் இருந்திருந்தால்…..

அந்தக் காரின் முன் 
விழாமல் இருந்திருந்தால்….

முன்னங்கால் முழுதும்
முடமாகாமல் இருந்திருந்தால்…..

அப்பா பள்ளிக்கு முழுக்குப் போடச்
சொல்லாமல் இருந்திருந்தால்…..

உள்வீட்டில்
சக்கர நாற்காலியில்
சிறைப்படாமல் இருந்திருந்தால்….

இன்று
தானும் ஒரு
கணினி விஞ்ஞானி
என்னும்
முடமாகிப் போன கனவுகளுடன்!



20 comments:

  1. முடமாகிப் போன கனவுகள் -- வருத்தமடையச்செய்யும் நிகழ்வு !

    ReplyDelete
    Replies
    1. இது நிகழ்வே இராஜராஜேஸ்வரி. நன்றி

      Delete
  2. நெகிழ்ச்சியான கவிதை!

    ReplyDelete
    Replies
    1. க்ருத்துக்கு மிக்க நன்றி வரலாற்றுச் சுவடுகள்

      Delete
  3. வருத்தமான நிகழ்வு.அருமையான கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை மகிழ்ச்சியாக உள்ளது ராசன். தங்கள் வரவு நல்வரவாகுக.

      அழகான க்ருத்து மனமார்ந்த நன்றி தோழர்.

      Delete
  4. ஐயோ உருக்கமான வரிகளில் மனதை நெகிழச் செய்துவிட்டீர்களே
    அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தால் என் மனத்தைச் சிறகடித்துப் பறக்கச் செய்து விட்டீர்கள். நன்றி சிட்டுக்குருவி.

      Delete
  5. நான் வாழ்வில் கண்ட நிறைய நண்பர்களுக்கு
    நேர்ந்திருக்கிறது இந்த நிகழ்வு...
    வாழ்வின் பிற்காலங்களில் எண்ணி எண்ணி
    மனம் புழுங்கச் செய்யும் நிகழ்வு இது...

    ReplyDelete
    Replies
    1. ஆம் மகேந்திரன் அவர்களே. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மகேந்திரன்.

      Delete
  6. Replies
    1. த்ங்க்ள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க ந்ன்றி வெங்கட் நாகராஜ்

      Delete
  7. மனதை வருடும் துயரக் கவிதை வரிகள் !!!!!....:(
    பகிர்வுக்கு நன்றி சகோதரி .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி சகோதரி அம்பாளடியாள் அவர்களே

      Delete
  8. மனம் நெகிழவைத்த கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விமலன் அவர்களே.

      Delete
  9. Replies
    1. கருத்துக்கு நன்றி சீனி அவர்களே

      Delete
  10. மனம் கலங்கச் செய்த கவிதை

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் நிகழ்கின்றன சிவா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா

      Delete