Monday, June 9, 2014

முரட்டுப் பிரியம்



பந்தயத்தில்
ஓடத் தயாராக இருக்கும்
தடகள வீரரைப் போல்
முற்றத்தில் காத்திருந்தது
என் மீதான
உன் பிரியம்

கதவு திறக்கும்
அக்கணத்தில்
உள்ளே நுழைய ஆயத்தமாக

ஆக்கிரமிப்புக்கு அஞ்சி
இறுகத் தாளிட்டேன்
இரட்டைக் கதவுகளையும்

தாழ்க்கோல் துவாரத்தில்
நுழைந்து
அறைகள் தோறும் வியாபித்திருக்கும்
அந்த முரட்டுப் பிரியத்தை
எப்படிச் சுவாசிப்பது

10 comments:

  1. பிரியம் என்ற கவிதையின்
    அதி உச்ச வெளிப்பாடாக
    முரட்டுப் பிரியம்
    கவிதையைப் பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள் ஜீவலிங்கம் சார்

      Delete

  2. வணக்கம்!

    நெஞ்சுள் நிதை்திடக் கொஞ்சும் தமிழளித்தாய்!
    விஞ்சும் சுவையை விளைத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வெண்பாவில் ஒரு ஒண்பா. அழகு.

      Delete
  3. பிரியத்தை விரும்புபவர்கள் முரட்டுப் பிரியத்துக்கும் சில நேரம் அடிபணிய நேரிடும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ஜி.என். பி. ஐயா.

      Delete
  4. பிரியமுடியாத பிரியமாய் இருக்கிறது முரட்டுப் பிரியம்

    ReplyDelete
    Replies
    1. ஆம்.. ஆத்மாவின் வருகையும் ஆழ்மனக் கருத்தும் உவகை அளிக்கிறது. நன்றி

      Delete
  5. முரட்டுப் பிரியம்.... ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete