ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Saturday, June 7, 2014

ரகசியமாகநீ தூவிய 
குறுநகையிலிருந்து
என் நிலத்தில் 
முளை விடுகிறது 
ஒரு செடி

உன் கூரை தாண்டிய

மேகம்
கொண்டு வந்து
பொழிகிறது
உன் சுவாசத்தை

உன் சாளரத்திலிருந்து

வந்த தென்றல்
புன்னகையைப் பூட்டுகிறது
பூக்களின் இதழ்களில்

பூத்துக் குலுங்கும்

உன்னை
எவருமறியாமல் வாசிக்க
ஒரு பெயர் சூட்டுவாயா
ரகசியமாக?


12 comments:

 1. மலர் :)) அருமையான சிந்தனை வெள்ளோட்டம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
  Replies
  1. வருகையிலும் கருத்திலும் வாழ்த்திலும் மகிழும் மனம். நன்றியுடன் அன்பும்

   Delete
 2. Replies
  1. நன்றி திரு ஜீவலிங்கம் அவர்களுக்கு

   Delete
 3. மழை....!...? எனக்கு இந்த மாதிரி அப்ஸ்ட்ராக்ட் எண்ண ஓட்டங்கள் புரிவதில்லை. என் வலையில் ஒரு போட்டி. பங்குபெற வாருங்களேன்

  ReplyDelete
  Replies
  1. வந்து விட்டேன் ஜி.என்.பி சார்

   Delete
 4. அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தளிர் சுரேஷ்

   Delete
 5. அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட் நாகராஜ்

   Delete