Monday, March 11, 2013

இலக்கணப் புத்தகம்



நீ நான் அவள் அவன்
என்ற
தன்மை முன்னிலை படர்க்கை
எல்லாம்
தம் சுயம் இழந்து
நாம்
என்னும் பொதுச்சொல்லாகிய
இலக்கணப் புத்தகம்
நட்பு



20 comments:

  1. அருமையாகச் சொன்னீர்கள் தோழி !
    நடப்புக்கு இதை விட வேறென்ன இலக்கணம்
    இருக்க முடியும் !.வாழ்த்துக்கள் நம் நட்பும்
    இனிதே தொடர வேண்டும் இதுபோல் .

    ReplyDelete
    Replies
    1. நம் நட்பு அப்படியே தொடரும் தோழி. அதில் ஐயமென்ன. வருகைக்கு நன்றி தோழி

      Delete

  2. வணக்கம்!

    பொற்புடன் போற்றிப் புனைந்த வரிகளைப்
    பற்றுடன் பற்றல் பயன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
    Replies
    1. பற்றுடன் பற்றவே இணைந்தோம் இத்தளத்தில்
      சற்றும் ஐயம் இலை
      குறட்பா கொஞ்சு வாழ்த்து சொன்ன கம்பன் கழகத் தலைவர் அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி.

      Delete
  3. நட்புக்கான அழகிய இலக்கணம் சகோதரி....

    ReplyDelete
    Replies
    1. நம் நட்பு போலவா மகேந்திரன்? நன்றியுடன் நட்புடன்..

      Delete
  4. நட்பின் இலக்கணம் அருமை. பயமில்லாத சுயமிழப்புகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஸ்ரீராம். சற்றும் பயமில்லாதது நட்பு. வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  5. Replies
    1. நட்பே சிறப்பு தனபாலன் சார். மிக்க நன்றி நட்புக்கு

      Delete

  6. அழகாகச் சொன்னீர்கள். !

    ReplyDelete
  7. நட்பின் இலக்கணத்தைச் சுருக்கமாக,ஆனால் அழுத்தமாகச் சொல்லி விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சென்னைப் பித்தன் அவர்களே.

      Delete
  8. நட்பின் இலக்கணம் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  9. நட்பின் நல் இலக்கணம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete