பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள்
மூடிய விழிகளில்
கண்களைத் தழுவாத உறக்கத்தின் முனகல்
வெய்யில் கால மண்புழுவாய் நெளியும் மேனி
காலையில் கட்ட சேலை, கரண்ட் பில்
மேலாளருக்குச் சொல்லப் பொய்,
காபிக்குச் சர்க்கரை, கவிதைக்குக் கரு
தொடர் வண்டியாய்...
ஈரத்துணியாய் கனத்த இமைகள்
சுமைகள் தாண்டி உறங்கும் நேரம்
முடிந்து விட்டது
மொத்த இரவும்!
முடித்துள்ளது அருமை... (அதற்குள்ளேவேவா முடிந்து விட்டது...?)
ReplyDeleteஆம் தனபாலன். அதற்குள்ளே முடிந்து விடுகிறது. விடிந்து விடுகிறது. மீண்டும் அடுத்த....
Deleteஆமாமாம் . கொசுக்களை அடித்து அடித்தே மொத்த இரவும் முடிந்து விடுகிறது,
ReplyDeleteகவிதை பல விசயங்களை சொல்லாமல் சொல்லுகிறது .
அருமை மேடம்
ஹா ஹா கொசுக்களுக்கு லிக்விடேட்டர் வைக்க மாட்டீங்களா சிவா?
Deleteவிடியாத இரவும் முடியாத நினைவும் எல்லோருக்கும் பரிச்சயமானவையாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீண்ட நாளைக்குப் பின் தங்கள் வருகை மகிழ்விக்கிறது.
ReplyDeleteஉறக்கத்தை தொலைக்க வைக்கும் நினைவுகள் எல்லாம் படுக்கப் போகும் நேரத்தில்தான் படை எடுக்கும். நன்றாகச் சொன்னீர்கள்.
ஆம் ஐயா. வருகைக்கு கருத்துக்கு நன்றி
Delete