Tuesday, November 19, 2019
Sunday, November 17, 2019
கவிஞர் வண்ணதாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் புத்தகத் திருவிழாவில் சந்தித்துப் பேசியது. கவிஞர் சக்தி ஜோதியின் நூல் உள்ளதா என்று கேட்டு சந்தியா பதிப்பகத்தில் வாங்கிக் கொண்டிருந்தேன். அங்கு வந்த கவிஞர் கல்யாண்ஜி அவர்கள் சக்தி ஜோதியை அலைபேசியில் அழைத்து பேசி நான் நூல் கேட்டு வாங்கியதைக் கூறி என்னிடம் பேச வைத்தார். அப்போதுதான் கல்யாண்ஜி அவர்களோடு எனக்கு நேரடி அனுபவம். ஆனால் சக்தி ஜோதி எனக்குத் தோழிதான்.
இரண்டு ஆண்டுகள் கழித்து சென்ற மாதம் கோவை புத்தகத் திருவிழாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் தங்கியிருந்த விடுதியில்தான் புலவர் ஷண்முக வடிவேல் ஐயாவும் கல்யாண்ஜி அவர்களும் தங்கியிருந்தார்கள். என்னைப் பார்த்த உடனே சென்னைப் புத்தகத் திருவிழாவில் பார்த்தது, எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பிறகு நீண்ட நேரம் பேசி சிரித்துக் கொண்டு இருந்தோம். என்னை அவர் நினைவில் வைத்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஒரு முறை பார்த்த அளவில் இவ்வளவு நினைவோடு மட்டுமல்ல அன்பையும் காட்ட கவிஞர்களால் தான் முடியும். அதுவும் கல்யாண்ஜி போன்றவர்களால்தான் முடியும். யாரிடமும் பேசுவதற்குத் தயங்குபவள் நான். அவரே அழைத்துப் பேசியது இன்னும் மகிழ்வாக இருந்தது. அன்பாழி கவிஞர் வண்ணதாசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .
முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருது வழங்கும் விழாவில்
முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருது வழங்கும் விழாவில்




நல்லக் கண்ணு ஐயாவால் என் நூல் ஆசிரிவதிக்கப் பெற்ற தருணம்
நல்ல கண்களால் (நல்லக் கண்ணு ஐயாவின்) என் நூல் ஆசிரிவதிக்கப் பெற்ற தருணம்
*************************************************
*************************************************

நேற்று காலை பத்து மணி இருக்கும் ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் நான் நல்லக் கண்ணு பேசறேன்மா என்று ஒரு கனிவான குரல். ஐயா வணக்கம்.நலமாக இருக்கிறீர்களா என்றேன். நன்றாக இருக்கிறேன் நீங்க எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டு பதில் முடிந்ததும் உங்க திருஅருட்பாவில் அவன் - அவள் நூல் படித்தேன் என்று தொடங்கி..... நான் அந்த நூலுக்கு கவிதை உறவின் பரிசைக் கொடுத்த அன்றே அந்நூலைப் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். கிடைக்கவில்லை என்றார். (மேடையிலேயே அந்த நூல் எனக்கு வேண்டும் என்று கேட்டார். நான் கையில் இல்லை ஐயா. நான் கொண்டு வந்து தருகிறேன் என்று கூறி வந்தேன். பண்ணைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் ஐயாவிடம் அந்நூலைத் தந்தேன்) ஊரனடிகள் நூலைப் படித்திருக்கிறேன். இது ஒரு ஆழமான ஆய்வு.
புராணங்களைத் தொன்மம் என்று எழுதியுள்ளதும் புராணங்கள் அனைத்தும் கதைகள் என்று கொள்ளலாகாது.கதைகள் வாயிலாகச் சொல்லப் பட்ட தத்துவங்கள் என்று நீங்கள் வள்ளலாரை முன் வைத்து நிறிவியுள்ளது நன்றாக இருந்தது.
வெறியாட்டு என்னும் நிகழ்வை வள்ளலார் உயிர்க்கொலையைக் காரணமாக வைத்து பொங்கலிடும் திருவிழாவாக மாற்றி உள்ளார் என்று எழுதியது மேலும் சிறப்பு.
மடலேறுதல் பற்றி விரிவாக எழுதியுள்ளீர்கள். பெண் மடலேறுதல் திருமங்கை ஆழ்வார் பக்தி இலக்கியங்களில் முதலில் கையாண்டுள்ளார் என்று எழுதியுள்ளீர்கள். அப்படி என்றால் வடநாடு அப்போதே பெண்ணியம் சார்ந்து அவ்வளவு முன்னேறி உள்ளதா? என்று கேட்டு என்னை அதிர்ச்சி அடைய வைத்தார். அதிலிருந்து இராமாயண அகலிகையை கம்பன் வேறு மாதிரியாகவும் வால்மீகி வேறு மாதிரியாகவும் எழுதியுள்ளதைப் பற்றி பேசி..........
ஒவ்வொரு பகுதியாகச் சொல்லி..... அழுத்தமான நூல் அம்மா. கடினமாக உழைத்துள்ளீர்கள் என்பது ஒவ்வொரு கருத்தைச் சான்றுகளுடன் விளக்கியதி தெரிகிறது என்று பாராட்டிய போது..... அந்த இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் என் சித்தியின் மறைவுச் செய்தியைத் தாங்கிய பாரமான மனத்துடன் மகிழ்வுந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன் அம்மாவுடனும் சகோதரனுடனும்.
கண்ணன் பாடல்களில் கரைந்த பொழுது - கிருஷ்ண ஜெயந்தி விழா
கண்ணன் பாடல்களில் கரைந்த பொழுது
******************************************************
******************************************************






மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் வின் தொலைக்காட்சியின் நிறுவனருமான டாக்டர் தேவநாதன் யாதவ் அவர்கள் நடத்திய கிருஷ்ண ஜெயந்தி விழா ரசிக ரஞ்சனி சபாவில் 04/09/19 அன்று நடைபெற்றது.
வான் மழையில் நனைந்து சென்று லஷ்மன் ஸ்ருதியின் இன்னிசை மழையில் நனைந்தவர்களில் நானும். கல்லூரியிலிருந்து வந்து கிளம்பும் போது சரியான மழை வாராது வந்த மா மழையால் மகிழ்வோடு துள்ளலோடும் கிளம்பியாயிற்று. கூட்ட நெரிசலில் ஒன்றே முக்கால் மணி நேரம் பயணம் செய்து (மகிழ்வுந்தில்தான்) அரங்கை அடைந்த போது இப்படி விழாக்களை வைத்து நம்மைக் கொல்லுகின்றார்களே என்று மனமும் உடலும் அலுத்துக் கொண்டது. குறிப்பாக மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் செயலர் திரு குணசீலன் அவர்கள் மீது கோபம் கோபமாக வந்தது.. ஒரு விழாவுக்கும் செல்லாமல் இருக்கவே முடியாதபடி இருக்கும் அவரது அன்பு அழைப்பு.
திரு குணசீலன் அவர்கள் அரங்கின் முன் வரிசையில் அழைத்துச் சென்று அமர வைத்த போது இருந்த சோர்வில் பாதி உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்ற பாடலில் பறந்து போனது. ஆட்டுவித்தால் யாரொருவன் ஆடாதாரோ கண்ணா என்ற பாடலில் வேடமிட்ட குட்டிக் கண்ணன் மேடையில் சினுங்கிய போது மீதி பாதி சோர்வும் பறந்து போனது. நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு என்னும் கம்பீரக் குரல் நிமிர்ந்து உடகார வைத்தது. ரசிகர்களின் வேண்டுகோளுக்காக கண்ணா கருமை நிறக் கண்ணா குழைந்து உருக்கியது. உள்ளத்தில் நல்ல உள்ளம் கிருஷ்ணனே (முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்) கேட்டுக் கொண்டதற்காக மீண்டும் பாடப் பட்டு உள்ளத்தை உருகச் செய்தது.
விழாவின் நிறைவில் முறுக்கு சீடை, பழங்கள், பரிசு, தாம்பூலம் என தாம்பாளம் நிறைய பிரசாதங்கள் வழங்கப் பட்டன.
கண்ணன் கீதங்களைக் கணேசன் (இல.) கிருஷ்ணன் (திருப்பூர்), இராதா கிருஷ்ணன் (பொன்) என்று கிருஷ்ணர்களே கேட்டு மகிழ்ந்தனர். பதொனொரு மணிக்கு இல்லம் திரும்பிய போதும் புத்துணர்ச்சியாக உள்ளம் உணர்ந்த விழா. சோர்வு மாற்றி சுகமாக்கிய விழா.
கூட்ட நெரிசலில் நீந்திச் சென்று உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடிய இளைஞரை வாழ்த்திய போது மனம் நிறைந்திருந்தது.லஷ்மன் ஸ்ருதி இராமன் அவர்களையும். இசைக்கு உருகார் யார்?
இசுலாமிய அமைப்புகள் பங்கேற்றது இவ்விழாவின் சிறப்பு.
இசுலாமிய அமைப்புகள் பங்கேற்றது இவ்விழாவின் சிறப்பு.
அன்பு அழைப்புக்கு நன்றி நண்பர் குணசீலன் யாதவ் அவர்களுக்கு.
மறத்தல் தகுமோ! - வழக்கறிஞர் சுமதி - இராணுவ வீரர் நிகழ்வு
மறத்தல் தகுமோ
****************************
****************************





அந்த ஞாயிறை (08/09/19) மறத்தல் தகுமோ! அது முறையோ! அது இயலுமோ!
வழக்கறிஞரும் நாடறிந்த நற்றமிழ்ப் பேச்சாளருமான திருமதி சுமதி அவர்கள் நிறுவியுள்ள S Foundation சார்பில் மறத்தல் தகுமோ என்னும் பெயரில் பேச்சுப் போட்டி மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முன்றாமாண்டில் அடியெடுத்து வைத்துள்ள இவ்வமைப்பு நாடு காக்கும் நற்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இராணுவ வீரர்களின் கடமையையும் தியாகத்தையும் போற்றி அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வண்ணம் தொடங்கப் பட்டது.
கலை அறிவியல், மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் இவ்வாண்டு “கார்கில் 20 ஆண்டுகள்” என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் நடைபெற்ற இப்போட்டிகளில் தமிழில் 270 மாணவர்களும் 100 (என்று நினைக்கிறேன்) மாணவர்களும் கலந்து கார்கில் போரையும் போரில் வீரதீரச் செயல் புரிந்த இராணுவ வீரர்களைப் பற்றியும் உணர்ச்சியாகப் பேசினர்.
ஒவ்வொரு அறையிலும் சுமார் பதினைந்து மாணவர்கள் பேசினர். ஒவ்வொரு பதினைந்து பேருக்கும் ஒரு தமிழறிஞர் ஒர் இராணுவ அதிகாரி என்று இருவர் நடுவராக பணியாற்றி இரண்டு மாணவர்களை அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்ந்து எடுத்தோம். என் அறையில் கார்கிலில் 30 ஆண்டுகள் பணியாற்றிய அப்படிச் சொன்னால் தகாது. தொண்டாற்றிய திரு ஸ்ரீகாந்த் அவர்களும் நானும் நடுவராக இருந்தோம். நாங்கள் மூன்று பேரைத் தேர்ந்து எடுத்தோம். திரு ஸ்ரீகாந்த மாணவர்களோடு தம் அனுபவங்களையும் இறுதிச் சுற்றில் வெற்றி பெற சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். நானும் அவர்களை ஊக்கப் படுத்தும் நோக்கில் சிற்றுரை ஆற்றினேன்.
பேச்சாளர் மணிமேகலை சித்தார்த் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வு வழக்கறிஞர் சுமதியின் கம்பீரக் குரலில் வாழ்த்தோடும் வந்தே மாதரத்தோடும் தொடங்கியது. போட்டியாளர்களுக்கு செல்வி சிம்மாஞ்சனா மற்றும் வழக்கறிஞர் பாலசீனிவாசன் இருவரின் மிகவும் தெளிவான அறிவுறுத்தல்கள், தன்னார்வத் தொண்டர்களாக பாரதி பெண்கள் கல்லூரி மாணவிகளின் அருந்தொண்டு என்று கட்டுக்கோப்பாக அரங்கேறியது கால் இறுதிச் சுற்றுப் பேச்சுப் போட்டி. அரையிறுதிச் சுற்றையும் செவி மடுத்து வர வேண்டும் என்று விருப்பம் இருந்த போதும் மாலை 4 மணிக்கு ஒரு நிகழ்ச்சி (கன்னிமாரா நூலகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா) இருந்ததால் நல்ல மதிய உணவோடு அரையிறுதிச் சுற்றுத் தொடங்கும் போது நான் விடை பெற்றேன்.
இரண்டு மகிழ்வு இந்நிகழ்வில். ஒன்று இராணுவத்தைப் போற்றும் விழாவை இதுவரை எவரும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. அது பெரும் மகிழ்வு. மற்றொன்று இளைய தலைமுறைகளுக்காக நடத்தும் இந்த நிகழ்வின் பொறுப்பை இளைய தலைமுறையின் (சிம்மாஞ்சனாவின்) கரங்களில் ஒப்படைத்தது.
எப்போதும் இலக்கியம், கவியரங்கம், நூல் வெளியீடு என்று ஒரே மாதிரியான நிகழ்வுகளுக்கு இடையில் மனத்தையும் உடலையும் கூன் விலக்கி பெருமையோடு நிமிரச் செய்தது இவ்விழா.
திருமதி சுமதி மற்றும் சிம்மாஞ்சனா இருவருக்கும்
வாழ்த்துகளும் அழைப்புக்கு நன்றியும்
வாழ்த்துகளும் அழைப்புக்கு நன்றியும்
திரு வீரரகு, திருமதி வீரரகு ஆகியோரின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழாவில்




ஞாயிறு 08/09/19 அன்று மாலை நடைபெற்ற திரு வீரரகு, திருமதி வீரரகு ஆகியோரின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழாவில்
கலைஞர் நகர் சுழற் சங்கத்தில் பொழிவு - தலைப்பு Think higher n greater






15/09/19 அன்று காலையில் கலைஞர் நகர் சுழற் சங்கத்தில் Think higher n greater என்னும் தலைப்பில் உரையாற்றினேன்.
எனக்கும் நிறைவாக... ஒவ்வொரும் பாராட்டினார்கள். ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் பேச வேண்டும் விண்ணப்பமும் வைத்தார்கள்.
நிகழ்வுக்கு என்னைப் பரிந்துரைத்த இலக்கிய மாமணி மெய் ரூசவெல்ட் அவர்களுக்கும் சுழற்சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் அழைப்பு கிடைக்கும் முன்பே என்னை வரவேற்று வாழ்த்திய லேடீஸ் ஸ்பெஷல் பெஷல் லேடி திருமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கும் முதலில் அழைப்பை அனுப்பி வாழ்த்து சொன்ன, நன்றியுரையில் மிகவும் சிலாகித்துப் பேசிய தமிழாசிரியர் கோவி பழனி அவர்களுக்கும் என் நன்றியும் அ
முற்றுப்புள்ளி கவிதை நூல் வெளியீட்டு விழா - நூல் பெற்று வாழ்த்துரை









15/09/19 அன்று மாலை கூகை திரையிடல் நூலகத்தில் உதய பாலாவின் முற்றுப்புள்ளி கவிதை நூல் வெளியீட்டு விழா இளைஞர்கள் மட்டுமே சூழ நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்திப்பிரிவு இணைச்செயலாளர் தோழர் தமிழன் பிரசன்னா நூலை வெளியிட நான் பெற்றுக் கொண்டேன். விடுதலை ச் சிகப்பி அறிமுக உரை ஆற்ற நூலாசிரியர் உதய பாலா ஏற்புரை வழங்கினார். அழுத்தமான தலித்திய கவிதைகளால் நிறைந்த அந்நூலின் ஆசிரியர் தம்பி உதய பாலாவை உச்சி முகர்ந்து பாராட்டி வந்தேன் நிறைந்த மனதோடு. இந்த கவிதைகளைப் பண்ணைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் துரை வசந்த ராசன் அவர்களிடம் அவருடைய பிறந்த நாள் பரிசாகப் படித்துக் காட்டினேன். நூலாசிரியரின் பதிவும் இங்கே....
*******†**********************
நேற்று நடந்த முற்றுப்புள்ளி கவிதை புத்தகத்தின் ஆசிரியர் உதயபாலா அவர்கள் நம் கூகையோடான அனுபவத்தை பகிர்ந்தார்...!!
நேற்று நடந்த முற்றுப்புள்ளி கவிதை புத்தகத்தின் ஆசிரியர் உதயபாலா அவர்கள் நம் கூகையோடான அனுபவத்தை பகிர்ந்தார்...!!
🤝🏿🤝🏿🤝🏿🤝🏿🤝🏿
கூகையில் நான்...
மிகுந்த நெகிழ்ச்சியான தருணம் அது. அழகிய மாலை வேளையிலே தொலைதூரக் கனவில் உள் நுழைந்த சுக அனுபவம்தான் கூகையில் நடைபெற்ற முற்றுப்புள்ளி கவிதை நூல் வெளியீட்டு விழா.
புரட்சி இயக்குனர், அண்ணன் பா.இரஞ்சித் அவர்களின் பரந்த நோக்கோடு பயணிக்கும் மாபெரும் பயணத்தில் சாமானிய இலக்கியத்தோடு பயணப்பட்டவன்தான் நான். என்னையும், என் எழுத்தையும் ஊக்கப்படுத்தி, அதை ஆக்கப்படுத்தவும் வாய்ப்புத் தந்தவர்.
முருகன் மந்திரம் அண்ணாவின் ஆக்கப்பணிகளையும் மறுத்துவிட முடியாது. இந்த விழா சிறப்பாக நடைபெற முதுகெலும்பாக செயல்பட்டவர். மேலும் தோழர் மூர்த்தி அவர்களுக்கும் எனக்குமான தொடர்பு கடந்த ஒருசில தினங்களுக்குள்ளாகத்தான் என்றாலும் கூகையில் அவரின் செயல்பாடுகள் என்னுள் மட்டுமல்ல, வந்து செல்லும் அனைத்து படைப்பாளிகளின் மத்தியிலும் ஆளுமை சார்ந்த நட்பு வட்டாரங்களை விரிக்கிறது.
தோழர் தினேஷ் ஆராதரன் அவர்களின் தொகுப்புரையில் கவிதை நூல் வெளியீட்டு விழா துவக்கம்பெற, தோழர் விடுதலை சிகப்பியின் தொடக்கவுரையிலேயே விழா முழுமை பெற்றது. முதிர்ந்த இலக்கிய அனுபவத்தை நல் இளமையிலே பெற்றிருந்ததை, சிறப்பு விருந்தினர்களான அண்ணன் தமிழன் பிரசன்னாவும், பேராசிரியர் அம்மா ஆதிரா முல்லை அவர்களும் வியந்ததை யாவரும் அறிவர்.
தனக்கான வாய்ப்புக்களை பயன்படுத்தி, கல்வி ஒன்றே பேராயுதம் என்று போராடி, அதிலும் தேர்ந்த ரத்தினமாய், கலைஞர் கண்டறிந்த திராவிடமாய் தற்காலச் சூழலிலே, பொதுத்தளத்திலே அசைக்க முடியாத ஒரு அரசியல் ஆளுமையாக விளங்குபவர் அண்ணன் தமிழன் பிரசன்னா. அவர்கள் விழாவில் நூல் வெளியிட்டு தனது வாழ்த்துரையை வழங்கினார். அவர் இதுவரையிலும் எந்த மேடையிலும் பேசாத தன் வாழ்வியல் அனுபவங்களையும், அதன் வலிகளையும், அதனால் தான் பெற்ற வெற்றிகளையும் முற்றுப்புள்ளி நூலோடு பொருத்தி பேசியது எங்களுக்குள் நல்ல தன் முனைப்பை ஏற்படுத்தியது.
பிறகு பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர், பெண்ணிய செயல்பாட்டாளர் அம்மா ஆதிரா முல்லை அவர்கள் நூலைப் பெற்று நூல் அறிமுக உரையில் பேருரை வழங்கினார். இந்த முற்றுப்புள்ளி கவிதைகளை மூன்று விதமாக பிரித்தும் அது பற்றிய விமர்சனங்களும்தான் உண்மையில் என் எழுத்தின் வெற்றியாகக் கருதுகிறேன். பொதுவாகவே எனது பெண்ணியம் சார்ந்த கவிதைகளை நான் இந்த சமூகத்திற்குச் சரியாகக்கொண்டு சேர்த்திருக்கிறேன் என்பதை பேராசிரியர் அம்மா ஆதிரா முல்லை அவர்களின் அறிமுகத்தில் என்னால் உணர முடிந்தது.
அவர்கள் காற்புள்ளி வைத்து துவக்கிவைத்த முற்றுப்புள்ளியின் வெளியீட்டு விழா எனது ஏற்புரையோடு விழா இனிதே நிறைவுற்றது.
படைப்பாளிகளின் சரணாலயத்தில் நானும் ஒரு பறவையாய் வலசை வந்ததும், வாழ்த்து பெற்றதும், நல் நட்புக்களைப் பெற்றதும் கூகை அமைத்துத் தந்த அரிதான வாய்ப்பு. இங்கே பலகோடி கொடுத்தாலும் வாங்க முடியாத வாழ்வின் பொக்கிஷங்கள் நிறைந்துகிடக்கின்றன. வாய்ப்பைத் தேடி வாசிப்போம்...
மனிதனை மனிதனாக நேசிப்போம்...
படைப்பாளிகளின் சரணாலயத்தில் நானும் ஒரு பறவையாய் வலசை வந்ததும், வாழ்த்து பெற்றதும், நல் நட்புக்களைப் பெற்றதும் கூகை அமைத்துத் தந்த அரிதான வாய்ப்பு. இங்கே பலகோடி கொடுத்தாலும் வாங்க முடியாத வாழ்வின் பொக்கிஷங்கள் நிறைந்துகிடக்கின்றன. வாய்ப்பைத் தேடி வாசிப்போம்...
மனிதனை மனிதனாக நேசிப்போம்...
கூகையின் அனைத்துத் தோழர்களுக்கும் நன்றிகள்...
- கவிஞர் எஸ். உதய பாலா
- கவிஞர் எஸ். உதய பாலா
தொல்காப்பியத்தில் தமிழிசை - தமிழிசைச் சங்கத்தில்
தொல்காப்பியத்தில் தமிழிசை .
21/08/19 அன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கமும் தமிழிசைக் கல்லூரியும் இணைந்து நடத்திய காலந்தோறும் தமிழிசை என்னும் சிறப்புக் கருத்தரங்கில் நீதியரசர் மகாதேவன் தொடக்கவுரை ஆற்றினார்.
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலாளர் இதயகீதம் இராமனுஜம் வரவேற்றார். தலைவர் முனைவர் கோ.பெரியண்ணன் தலைமை உரையாற்றினார்.
தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறையின் செயலர் முனைவர் ஒளவை அருள், டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம், தமிழிசைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் மீனாட்சி, கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் ஆகியோர் அமர்வுகளுக்குத் தலைமை வகித்து அற்புதமாக உரையாற்றினர்.
இலக்கிய வள்ளல் மாம்பலம் ஆ.சந்திரசேகர், கல்வியாளர் அமுதா பாலகிருஷ்ணன், க்ச்ல்வியாளர் நேமிதாஸ், இலக்கிய மாமணி ரூசவெல்ட் ஆகியோர் ஒவ்வொரு அமர்விலும் பங்கு பெற்றவர்களுக்குச் சிறப்புச் செய்தனர்.
அடியேன் முனைவர் ஒளவை அருள் தலைமையில் தொல்காப்பியத்தில் தமிழிசை என்னும் தலைப்பில் ஆய்வுரை ஆற்றினேன்.
நிறைவான நிகழ்வு. நினைவிகளின் நிழல்கள் சில.....
தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் அருள் நடராஜன் தலைமையில் கல்வியாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன் முன்னிலையில்...
நன்றி தமிழிசைச் சங்கம்
கலைஞர் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில்.. நக்கீரருக்கு தமிழ் அறிவித்த படலம்.



05/10/19 அன்று கலைஞர் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில்.. நக்கீரருக்கு தமிழ் அறிவித்த படலம்.... திருவிளையாடற் புராணம்
வள்ளலார் சன்மார்க்க சங்க நிகழ்வில் - தலைப்பு -வள்ளலாரின் நெஞ்சோடு


18/10/19 அன்று வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில் வள்ளலாரின் நெஞ்சோடு என்னும் தலைப்பில் உரையாற்றிய போது
அருகில் முன்னைத் துணைவேந்தர் அருணா சிவகாமி அவர்கள் மற்றும் வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் செயலாளர் ராமச்சந்திரன் ஐயா
பெரியார் நகர் நூலகத்தில் பொழிவு - தலைப்பு - வசப்படுத்தும் வாசிப்பு




20/10/19 அன்று பெரியார் நகர் நூலகத்தில் வசப்படுத்தும் வாசிப்பு என்னும் தலைப்பில் உரையாற்றிய தருணம்.. மேடைக்கு முதன் முதலாக என்னை அறிமுகப் படுத்திய (பேசவே தெரியாத என்னைப் பேசு பேசு என்று படுத்திய) துரை இலக்குமிபதி அவர்கள் மற்றும், அ.இல. ஜிந்தா, சுப்ரமணியன் ஐயா ஆகியோருடன்....
கவிஞர் பிருந்தா சாரதியின் இருளும் ஒளியும் நூல் திறனாய்வு




"பத்துப் பிரிவுகளாகப் பகுத்து
'#இருளும்_ஒளியும்' கவிதைகளை ஆராயலாம்"
- பேராசிரியர் முனைவர் #ஆதிராமுல்லை
*
படைப்புப் பதிப்பக வெளியீடான 'இருளும் ஒளியும்' நூலுக்கு ஒரு திறனாய்வுரையை அக்டோபர் 23 அன்று சென்னையில்
' கவிதை உறவு " அமைப்பின்
மாதாந்திரக் கூட்டத்தில் கலைமாமணி கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் முனைவர் ஆதிரா முல்லை வழங்கினார்.
அவரது உரையில் இருந்து :
'#இருளும்_ஒளியும்' கவிதைகளை ஆராயலாம்"
- பேராசிரியர் முனைவர் #ஆதிராமுல்லை
*
படைப்புப் பதிப்பக வெளியீடான 'இருளும் ஒளியும்' நூலுக்கு ஒரு திறனாய்வுரையை அக்டோபர் 23 அன்று சென்னையில்
' கவிதை உறவு " அமைப்பின்
மாதாந்திரக் கூட்டத்தில் கலைமாமணி கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் முனைவர் ஆதிரா முல்லை வழங்கினார்.
அவரது உரையில் இருந்து :
"திரைப்பட வசனகர்த்தாவும் இயக்குநருமான கவிஞர் பிருந்தா சாரதி அவர்களின் இருளும் ஒளியும் நூல் ஒரு வரி இரு வரிகளில் எழுதப்பட்ட சின்னஞ் சிறு கவிதைகள்தான் . ஆனால் ஒவ்வொரு வரியுமே பரவசங்களால் நிரம்பி வாசகர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கின்றது.
மொத்தம் 210 குறுங்கவிதைகள் இந்நூலில் உள்ளன. இருளையும் ஒளியையும் பல விதமான பரிமாணங்களில் படம் பிடிக்கும் இக்கவிதைகளை ஒரு பேராசிரியரின் கோணத்திலிருந்து பார்க்கும்போது அவற்றைப் பத்து வகையாகப் பிரிக்கத் தோன்றுகிறது எனக்கு.
அழகியல் கவிதைகள், ஆன்மிகக் கவிதைகள், அறிவியல் கவிதைகள், உலகியல் தத்துவக் கவிதைகள்,
சித்தர் தத்துவக் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், காதல் கவிதைகள், சிரிக்க வைக்கும் கிளுகிளுப்புக் கவிதைகள்,
சிந்தனையைத் தூண்டும் வினா வடிவக் கவிதைகள் என்று பத்து வகைகளாகப் பகுக்கிறேன்.
சித்தர் தத்துவக் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், காதல் கவிதைகள், சிரிக்க வைக்கும் கிளுகிளுப்புக் கவிதைகள்,
சிந்தனையைத் தூண்டும் வினா வடிவக் கவிதைகள் என்று பத்து வகைகளாகப் பகுக்கிறேன்.
ஒரு கவிதையில் ‘கூர்ந்து கவனி / தீபம் பேசுகிறது” என்பதும்
மற்றொரு கவிதையில் “உற்று நோக்காதே / விளக்குக்குக் கண் கூசுகிறது” என்பதும்
இருளையும் ஒளியையும் “ஒளிந்து விளையாடும் தீராக்காதலர்கள்” என்று ஒரு கவிதையிலும்
“ஒன்றை ஒன்று விழுங்கத் துடிக்கும் பாம்புகள்” என்று மற்றொரு கவிதையிலும் கூறுவது முரணியல் அழகு.
வள்ளுவரைப் போல பிருந்தா சாரதிக்கு இந்த முரண்பாடுகள்
முரண்படாமல் முந்தி வந்து சிந்து பாடுகின்றன.
முரண்படாமல் முந்தி வந்து சிந்து பாடுகின்றன.
"ஊனுடம்பு அகல் / எண்ணெய் குருதி / நாடி நரம்பாகும் திரி/ மூன்றையும் வசப்படுத்தி / ஆடிக்களித்து நின்று ஒளிரும் / அறிவே சுடர்” என்னும் கவிதை திருமூலரின்,
“உள்ளம் பெரும் கோவில் ஊனுடம்பு ஆலயம்”
என்னும் திருமந்திரத்தின் புது மந்திரம்.
‘ஏற்றி வைத்த சுடரை ஏக்கத்தோடு பாக்கிறது எரிந்த தீக்குச்சி”
என்னும் கவிதை இளையவர்களால் கைவிடப் பட்ட முதியவர்களின் ஏக்கத்தைக் கூறும் படிமம்.
"இறந்தவரின் கடைசிப் பார்வை இருளா? ஒளியா?"
என்னும் பிருந்தா சாரதியின் கேள்விக்கு பாப்லோ நெருடாவின், ‘மரணத்தின் முகம் பச்சை / மரணத்தின் பார்வையும் பச்சை” என்னும் இந்த கவிதை விடையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
“தொட்டிலில் ஆடும் குழந்தை போல் விளையாட்டு காட்டுகிறது / அகல் விளக்கில் ஆடும் சுடர்” என்று அழகியல் கவிதைகளாலும்
“காட்டுத் தீயை வீட்டு விளக்காய்க் கட்டுப் படுத்திக் கொடுத்தவர் எவரோ அவரே விஞ்ஞானி” என்று அறிவியல் கவிதைகளாலும்
"வெளியே எத்தனை விளக்குகள் எரிந்தாலும் / உன்னை பிரகாசமாக்குவது / உனக்குள் எரியும் சுடர்தான்”,
“விளக்கில் படி விளக்கையும் படி / விளக்காக வேண்டும் நீ”
என்று உள்ளத்தில் உத்வேக விளக்கை ஏற்றி வைக்கும் நம்பிக்கைக் கவிதைகளாலும்
“ஏற்றி வை / நான் எரிந்துகொண்டே / இருக்கிறேன்”
“தீபங்களை எழுத்துக் கூட்டிப் படித்தேன் அது உன் பெயர்”
போன்ற காதல் கவிதைகளாலும்
போன்ற காதல் கவிதைகளாலும்
“விளக்கை ஏற்றித் திருமணம் செய்யலாம்/ விளக்கை அணைத்தல்லவா தாம்பத்யத்தைத் தொடங்க வேண்டும்”
போன்ற கிளுகிளுப்பூட்டும் கவிதைகளாலும் நிறைந்த இந்நூல் அனைத்து தரப்பினரையும் அனைத்து வயதினரையும் வசப்படுத்தும்; பரவசப்படுத்தும்.
“பிறப்பா இறப்பா தீக்குச்சியின் உரசல்?”,
“வெளிச்சம் – இருட்டு / வரவு எது? செலவு எது?”,
“இரவே நீ தேவதையா? பிசாசா?”
முதலிய கவிதைகளால் மணிக்கணக்காகச் சிந்திக்க வைக்கும் இந்தச் சாக்கரடீசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?
ஒவ்வொருவரும் இந்த நூலை வாங்கி படிக்கலாம். மற்றவர்க்கும் பரிசாக வழங்கலாம்.
பிருந்தா சாரதியின் மற்ற கவிதை நூல்களில் இருந்து
' இருளும் ஒளியும் ' பல படிகள் உயர்ந்து பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளன.
' இருளும் ஒளியும் ' பல படிகள் உயர்ந்து பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளன.
“அலாவுதீன் விளக்கில் பூதம் என் விளக்கில் கவிதை”
என்று கூறும் நண்பர் பிருந்தா சாரதி விளக்கைத் தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டும். கவிதைகள் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்."
Subscribe to:
Posts (Atom)