








15/09/19 அன்று மாலை கூகை திரையிடல் நூலகத்தில் உதய பாலாவின் முற்றுப்புள்ளி கவிதை நூல் வெளியீட்டு விழா இளைஞர்கள் மட்டுமே சூழ நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்திப்பிரிவு இணைச்செயலாளர் தோழர் தமிழன் பிரசன்னா நூலை வெளியிட நான் பெற்றுக் கொண்டேன். விடுதலை ச் சிகப்பி அறிமுக உரை ஆற்ற நூலாசிரியர் உதய பாலா ஏற்புரை வழங்கினார். அழுத்தமான தலித்திய கவிதைகளால் நிறைந்த அந்நூலின் ஆசிரியர் தம்பி உதய பாலாவை உச்சி முகர்ந்து பாராட்டி வந்தேன் நிறைந்த மனதோடு. இந்த கவிதைகளைப் பண்ணைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் துரை வசந்த ராசன் அவர்களிடம் அவருடைய பிறந்த நாள் பரிசாகப் படித்துக் காட்டினேன். நூலாசிரியரின் பதிவும் இங்கே....
*******†**********************
நேற்று நடந்த முற்றுப்புள்ளி கவிதை புத்தகத்தின் ஆசிரியர் உதயபாலா அவர்கள் நம் கூகையோடான அனுபவத்தை பகிர்ந்தார்...!!
நேற்று நடந்த முற்றுப்புள்ளி கவிதை புத்தகத்தின் ஆசிரியர் உதயபாலா அவர்கள் நம் கூகையோடான அனுபவத்தை பகிர்ந்தார்...!!
🤝🏿🤝🏿🤝🏿🤝🏿🤝🏿
கூகையில் நான்...
மிகுந்த நெகிழ்ச்சியான தருணம் அது. அழகிய மாலை வேளையிலே தொலைதூரக் கனவில் உள் நுழைந்த சுக அனுபவம்தான் கூகையில் நடைபெற்ற முற்றுப்புள்ளி கவிதை நூல் வெளியீட்டு விழா.
புரட்சி இயக்குனர், அண்ணன் பா.இரஞ்சித் அவர்களின் பரந்த நோக்கோடு பயணிக்கும் மாபெரும் பயணத்தில் சாமானிய இலக்கியத்தோடு பயணப்பட்டவன்தான் நான். என்னையும், என் எழுத்தையும் ஊக்கப்படுத்தி, அதை ஆக்கப்படுத்தவும் வாய்ப்புத் தந்தவர்.
முருகன் மந்திரம் அண்ணாவின் ஆக்கப்பணிகளையும் மறுத்துவிட முடியாது. இந்த விழா சிறப்பாக நடைபெற முதுகெலும்பாக செயல்பட்டவர். மேலும் தோழர் மூர்த்தி அவர்களுக்கும் எனக்குமான தொடர்பு கடந்த ஒருசில தினங்களுக்குள்ளாகத்தான் என்றாலும் கூகையில் அவரின் செயல்பாடுகள் என்னுள் மட்டுமல்ல, வந்து செல்லும் அனைத்து படைப்பாளிகளின் மத்தியிலும் ஆளுமை சார்ந்த நட்பு வட்டாரங்களை விரிக்கிறது.
தோழர் தினேஷ் ஆராதரன் அவர்களின் தொகுப்புரையில் கவிதை நூல் வெளியீட்டு விழா துவக்கம்பெற, தோழர் விடுதலை சிகப்பியின் தொடக்கவுரையிலேயே விழா முழுமை பெற்றது. முதிர்ந்த இலக்கிய அனுபவத்தை நல் இளமையிலே பெற்றிருந்ததை, சிறப்பு விருந்தினர்களான அண்ணன் தமிழன் பிரசன்னாவும், பேராசிரியர் அம்மா ஆதிரா முல்லை அவர்களும் வியந்ததை யாவரும் அறிவர்.
தனக்கான வாய்ப்புக்களை பயன்படுத்தி, கல்வி ஒன்றே பேராயுதம் என்று போராடி, அதிலும் தேர்ந்த ரத்தினமாய், கலைஞர் கண்டறிந்த திராவிடமாய் தற்காலச் சூழலிலே, பொதுத்தளத்திலே அசைக்க முடியாத ஒரு அரசியல் ஆளுமையாக விளங்குபவர் அண்ணன் தமிழன் பிரசன்னா. அவர்கள் விழாவில் நூல் வெளியிட்டு தனது வாழ்த்துரையை வழங்கினார். அவர் இதுவரையிலும் எந்த மேடையிலும் பேசாத தன் வாழ்வியல் அனுபவங்களையும், அதன் வலிகளையும், அதனால் தான் பெற்ற வெற்றிகளையும் முற்றுப்புள்ளி நூலோடு பொருத்தி பேசியது எங்களுக்குள் நல்ல தன் முனைப்பை ஏற்படுத்தியது.
பிறகு பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர், பெண்ணிய செயல்பாட்டாளர் அம்மா ஆதிரா முல்லை அவர்கள் நூலைப் பெற்று நூல் அறிமுக உரையில் பேருரை வழங்கினார். இந்த முற்றுப்புள்ளி கவிதைகளை மூன்று விதமாக பிரித்தும் அது பற்றிய விமர்சனங்களும்தான் உண்மையில் என் எழுத்தின் வெற்றியாகக் கருதுகிறேன். பொதுவாகவே எனது பெண்ணியம் சார்ந்த கவிதைகளை நான் இந்த சமூகத்திற்குச் சரியாகக்கொண்டு சேர்த்திருக்கிறேன் என்பதை பேராசிரியர் அம்மா ஆதிரா முல்லை அவர்களின் அறிமுகத்தில் என்னால் உணர முடிந்தது.
அவர்கள் காற்புள்ளி வைத்து துவக்கிவைத்த முற்றுப்புள்ளியின் வெளியீட்டு விழா எனது ஏற்புரையோடு விழா இனிதே நிறைவுற்றது.
படைப்பாளிகளின் சரணாலயத்தில் நானும் ஒரு பறவையாய் வலசை வந்ததும், வாழ்த்து பெற்றதும், நல் நட்புக்களைப் பெற்றதும் கூகை அமைத்துத் தந்த அரிதான வாய்ப்பு. இங்கே பலகோடி கொடுத்தாலும் வாங்க முடியாத வாழ்வின் பொக்கிஷங்கள் நிறைந்துகிடக்கின்றன. வாய்ப்பைத் தேடி வாசிப்போம்...
மனிதனை மனிதனாக நேசிப்போம்...
படைப்பாளிகளின் சரணாலயத்தில் நானும் ஒரு பறவையாய் வலசை வந்ததும், வாழ்த்து பெற்றதும், நல் நட்புக்களைப் பெற்றதும் கூகை அமைத்துத் தந்த அரிதான வாய்ப்பு. இங்கே பலகோடி கொடுத்தாலும் வாங்க முடியாத வாழ்வின் பொக்கிஷங்கள் நிறைந்துகிடக்கின்றன. வாய்ப்பைத் தேடி வாசிப்போம்...
மனிதனை மனிதனாக நேசிப்போம்...
கூகையின் அனைத்துத் தோழர்களுக்கும் நன்றிகள்...
- கவிஞர் எஸ். உதய பாலா
- கவிஞர் எஸ். உதய பாலா
No comments:
Post a Comment