கண்ணன் பாடல்களில் கரைந்த பொழுது
******************************************************
******************************************************






மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் வின் தொலைக்காட்சியின் நிறுவனருமான டாக்டர் தேவநாதன் யாதவ் அவர்கள் நடத்திய கிருஷ்ண ஜெயந்தி விழா ரசிக ரஞ்சனி சபாவில் 04/09/19 அன்று நடைபெற்றது.
வான் மழையில் நனைந்து சென்று லஷ்மன் ஸ்ருதியின் இன்னிசை மழையில் நனைந்தவர்களில் நானும். கல்லூரியிலிருந்து வந்து கிளம்பும் போது சரியான மழை வாராது வந்த மா மழையால் மகிழ்வோடு துள்ளலோடும் கிளம்பியாயிற்று. கூட்ட நெரிசலில் ஒன்றே முக்கால் மணி நேரம் பயணம் செய்து (மகிழ்வுந்தில்தான்) அரங்கை அடைந்த போது இப்படி விழாக்களை வைத்து நம்மைக் கொல்லுகின்றார்களே என்று மனமும் உடலும் அலுத்துக் கொண்டது. குறிப்பாக மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் செயலர் திரு குணசீலன் அவர்கள் மீது கோபம் கோபமாக வந்தது.. ஒரு விழாவுக்கும் செல்லாமல் இருக்கவே முடியாதபடி இருக்கும் அவரது அன்பு அழைப்பு.
திரு குணசீலன் அவர்கள் அரங்கின் முன் வரிசையில் அழைத்துச் சென்று அமர வைத்த போது இருந்த சோர்வில் பாதி உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்ற பாடலில் பறந்து போனது. ஆட்டுவித்தால் யாரொருவன் ஆடாதாரோ கண்ணா என்ற பாடலில் வேடமிட்ட குட்டிக் கண்ணன் மேடையில் சினுங்கிய போது மீதி பாதி சோர்வும் பறந்து போனது. நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு என்னும் கம்பீரக் குரல் நிமிர்ந்து உடகார வைத்தது. ரசிகர்களின் வேண்டுகோளுக்காக கண்ணா கருமை நிறக் கண்ணா குழைந்து உருக்கியது. உள்ளத்தில் நல்ல உள்ளம் கிருஷ்ணனே (முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்) கேட்டுக் கொண்டதற்காக மீண்டும் பாடப் பட்டு உள்ளத்தை உருகச் செய்தது.
விழாவின் நிறைவில் முறுக்கு சீடை, பழங்கள், பரிசு, தாம்பூலம் என தாம்பாளம் நிறைய பிரசாதங்கள் வழங்கப் பட்டன.
கண்ணன் கீதங்களைக் கணேசன் (இல.) கிருஷ்ணன் (திருப்பூர்), இராதா கிருஷ்ணன் (பொன்) என்று கிருஷ்ணர்களே கேட்டு மகிழ்ந்தனர். பதொனொரு மணிக்கு இல்லம் திரும்பிய போதும் புத்துணர்ச்சியாக உள்ளம் உணர்ந்த விழா. சோர்வு மாற்றி சுகமாக்கிய விழா.
கூட்ட நெரிசலில் நீந்திச் சென்று உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடிய இளைஞரை வாழ்த்திய போது மனம் நிறைந்திருந்தது.லஷ்மன் ஸ்ருதி இராமன் அவர்களையும். இசைக்கு உருகார் யார்?
இசுலாமிய அமைப்புகள் பங்கேற்றது இவ்விழாவின் சிறப்பு.
இசுலாமிய அமைப்புகள் பங்கேற்றது இவ்விழாவின் சிறப்பு.
அன்பு அழைப்புக்கு நன்றி நண்பர் குணசீலன் யாதவ் அவர்களுக்கு.
No comments:
Post a Comment