Sunday, November 17, 2019

நல்லக் கண்ணு ஐயாவால் என் நூல் ஆசிரிவதிக்கப் பெற்ற தருணம்

நல்ல கண்களால் (நல்லக் கண்ணு ஐயாவின்) என் நூல் ஆசிரிவதிக்கப் பெற்ற தருணம்
*************************************************
Image may contain: 7 people, including கவிக்கோதுரைவசந்தராசன் பண்ணைத்தமிழ்ச்சங்கம், people smiling, people standing


நேற்று காலை பத்து மணி இருக்கும் ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் நான் நல்லக் கண்ணு பேசறேன்மா என்று ஒரு கனிவான குரல். ஐயா வணக்கம்.நலமாக இருக்கிறீர்களா என்றேன். நன்றாக இருக்கிறேன் நீங்க எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டு பதில் முடிந்ததும் உங்க திருஅருட்பாவில் அவன் - அவள் நூல் படித்தேன் என்று தொடங்கி..... நான் அந்த நூலுக்கு கவிதை உறவின் பரிசைக் கொடுத்த அன்றே அந்நூலைப் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். கிடைக்கவில்லை என்றார். (மேடையிலேயே அந்த நூல் எனக்கு வேண்டும் என்று கேட்டார். நான் கையில் இல்லை ஐயா. நான் கொண்டு வந்து தருகிறேன் என்று கூறி வந்தேன். பண்ணைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் ஐயாவிடம் அந்நூலைத் தந்தேன்) ஊரனடிகள் நூலைப் படித்திருக்கிறேன். இது ஒரு ஆழமான ஆய்வு.
புராணங்களைத் தொன்மம் என்று எழுதியுள்ளதும் புராணங்கள் அனைத்தும் கதைகள் என்று கொள்ளலாகாது.கதைகள் வாயிலாகச் சொல்லப் பட்ட தத்துவங்கள் என்று நீங்கள் வள்ளலாரை முன் வைத்து நிறிவியுள்ளது நன்றாக இருந்தது.
வெறியாட்டு என்னும் நிகழ்வை வள்ளலார் உயிர்க்கொலையைக் காரணமாக வைத்து பொங்கலிடும் திருவிழாவாக மாற்றி உள்ளார் என்று எழுதியது மேலும் சிறப்பு.
மடலேறுதல் பற்றி விரிவாக எழுதியுள்ளீர்கள். பெண் மடலேறுதல் திருமங்கை ஆழ்வார் பக்தி இலக்கியங்களில் முதலில் கையாண்டுள்ளார் என்று எழுதியுள்ளீர்கள். அப்படி என்றால் வடநாடு அப்போதே பெண்ணியம் சார்ந்து அவ்வளவு முன்னேறி உள்ளதா? என்று கேட்டு என்னை அதிர்ச்சி அடைய வைத்தார். அதிலிருந்து இராமாயண அகலிகையை கம்பன் வேறு மாதிரியாகவும் வால்மீகி வேறு மாதிரியாகவும் எழுதியுள்ளதைப் பற்றி பேசி..........
ஒவ்வொரு பகுதியாகச் சொல்லி..... அழுத்தமான நூல் அம்மா. கடினமாக உழைத்துள்ளீர்கள் என்பது ஒவ்வொரு கருத்தைச் சான்றுகளுடன் விளக்கியதி தெரிகிறது என்று பாராட்டிய போது..... அந்த இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் என் சித்தியின் மறைவுச் செய்தியைத் தாங்கிய பாரமான மனத்துடன் மகிழ்வுந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன் அம்மாவுடனும் சகோதரனுடனும்.

No comments:

Post a Comment