Sunday, June 3, 2012

தமிழின் தலைமகனுக்கு ஒரு வாழ்த்து


கல்லணை தந்தான் சோழன்
கனித்தமிழ் செழிக்க மேடை
சொல்லணை தந்தாய் நீதான்
சுவையணை வரியில் வைத்தாய்
பல்லணை பயிர்க்குத் தந்தாய்
பழந்தமிழ் நீயே காத்தாய்
நெல்லணை தஞ்சை வளத்தை
நிதம்நிதம் நாட்டில் வார்த்தாய்

அஞ்சுகத் தாயின் மைந்தா
ஐம்முறை ஆட்சி கண்டாய்
நஞ்சிடும் வைதீ கத்தின்
நரம்பினை அறுத்துச் சாய்த்தாய்
கொஞ்சிடும் ச்ங்கப் பாட்டைக்
குப்பனும் கேட்க வைத்தாய்
அஞ்சிடும் பெரியார் தொண்டின்
அனலென பகையைத் தீய்த்தாய்

அண்ணனின் கொள்கை காத்தாய்
அவர்புகழ் உலகு சேர்த்தாய்
தென்னவர் பண்பாட் டுக்குக்
திருக்குறள் கோட்டம் கண்டாய்
கண்ணகி சிலம்பைக் காட்டும்
கடற்கரை சிலையை வைத்தாய்
தண்டமிழ் தலைவா நீயும்
தரைகடல் காலம் வாழ்க!






4 comments:

  1. Replies
    1. பொருள் புரிவில்லை.

      Delete
  2. அளவு கடந்த மதிப்பு பெறத் தகுதி உள்ளவராய் இருத்தல் அவசியம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் என்று நினைக்கும் போது என் மனத்தில் ஒரு தனித்தகுதி பெறுகிறார். நாணயத்தின் இரு பக்கங்கள் போல நன்மைகளைப் பாத்து தலை வணங்குகிறேன். கருத்துக்கு நன்றி ஐயா.

      Delete