என்றோ
மாய்ந்து போன
காதலின்
சுவடுகளை
சவக்குழியில்
புதைக்க நினைக்கிறேன்.
அறிவுப் பாடையில்
அரங்கேறிய
ஆயிரமாயிரம்
அணுக்களில் இருந்தும்
பிடுங்கி எடுத்த
நினைவின்
நீண்ட நெடிய
கடைசி
ஊர்வலத்திற்கு
இதயம்
அடிக்கிறது
தாரை தப்பட்டை
கண்கள்
கன்னத் தெருவெங்கும்.
மத்தாப்புப்
பூக்களை
உதிர்க்கிறது
நாவின்
புலம்பல்
நர்த்தனத்துடன்
இறுதிச்சடங்கு
நடக்கிறது
என்னுள்ளிருந்து
இடம்பெயர்ந்தது
அந்த நாட்கள்
என்றிருக்கும்போது
பிரேதப்
பரிசோதனைக்காகத்
தோண்டி எடுக்கப்படும்
பிணங்களாய்
மீண்டும்
மெல்ல மெல்ல
மேலெழுகின்றன
நினைவுச் சவங்கள்!
தனிமையின் தருணங்களை
ReplyDeleteதகனக் குழிகளின்
நினைவுத் தூண்டல்களுடன்
ஒப்பிட்டு உரைத்திட்ட கவி...
அருமை சகோதரி...
நன்றி மகேந்திரன். தகனம் போன்ற சொற்களை நான் அதிகம் பயன் படுத்துவதில்லை.
Deleteada daa!
ReplyDeletevalikal inge-
varikalaaka!
நன்றி சீனி
Deleteஉண்மை
ReplyDeleteஎல்லாருடைய வாழ்க்கையிலும்
அவ்வப்போது உயிர்த்தெளுவதுண்டு
இந்த நினைவுச் சவங்கள்
அன்பு செயதாலி அவர்களே,
Deleteநினைவுச்சவங்கள் என்று எழுதிவிட்டேன்.ஆனால் உயிர்த்து உயிர்த்து உயிரை வாங்கும் அதனை எப்படி சவம் என்று சொல்வது என்று நீண்ட சிந்தனை.
தெளிவு படுத்துங்கள் தோழர்.
ஒரு
Deleteஅற்ப ஆயுளில் இறக்கும் சடலத்தின்
ஆத்தமா மோட்சம் வரும்வரை
பூவுலகில் சுற்றித்திரியுமா - எங்கோ படித்தது
இறப்பது
சவங்கள் (சடலங்கள் )
அதன் உயிர்ப்பு மோட்சம் கிட்டும்வரை
நம் சார்ந்த வாழ்கையில் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது தோழி
நம் கடந்த காலத்தின் நிகழ்வுகளை
நினைவுகள் என்கிறோ
கடந்த காலம் என்பது (சவம் )
நினைவு என்பது உயிர்ப்பு
நீங்கள் எழுதிய உயிர்த்தெழல் மற்றும் சவங்கள் வார்த்தைகள் சரியே தோழி
இப்போது புரிகிறது. நீண்ட விளக்கத்திற்கு நன்றி செய்தாலி.
ReplyDelete