Friday, June 15, 2012

மரணித்தும்


கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லை
என்று
கூறுவதெல்லாம்
சுத்தப் பொய்
உன்
வார்த்தைகளின்
மெளனத்தால்
மரணித்தும்
உயிர்த்திருக்கிறேனே!

14 comments:

  1. கண்டிப்பா ''உண்மை''


    நிறைபேர்
    உடல் மரணத்தையே மரணம் என்று எண்ணுகிறார்கள்
    சதை சடலம் மரணிப்பதற்கு முன்
    எத்தனை முறை மரணிக்கிறார்கள் தெரியுமா
    வாழும் மனிதர்கள்

    மரணித்தலை உணர்பவர்களுக்கு அதன் உண்மை உணரமுடியும்

    என் இறத்தலின் வலியில் இதையே சொல்லி இருக்கிறேன் தோழி

    ReplyDelete
    Replies
    1. உடனடியாக வந்து உணர்வு பூர்வமான கருத்தை இட்டு உள்ளீர்கள் செய்தாலி.. செத்து செத்து வாழும் இந்த வாழ்வில் சுவர்க்கம் நிரையம் இரண்டும் இருப்பதாக கூற முடியும். இது குறித்தும் தங்கள் கருத்து தேவை. தங்கள் கவிதையைப் பார்க்கிறேன்.

      Delete
  2. நல்ல கவிதை சகோ.!

    ReplyDelete
  3. உயிர்ப்பான உன் மௌனம்
    உணர்ச்சியை கிளர்ந்திட்டு
    என்னை உயிர்த்தெழச் செய்தது...

    அபாரமான கற்பனை சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. அழகிய கவிதையுடன் வாழ்த்து. மிக்க நன்றி மகேந்திரன்

      Delete
  4. அருமையான படைப்பு

    ReplyDelete
  5. சில வார்த்தைகள் மரணிக்கச் செய்யும்.
    சில மௌனங்கள் உயிர்ப்பிக்கச் செய்யும்.

    அருமையான கவிதை. நீண்ட நேரம் அசை போட வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. சில வார்த்தைகள் மரணிக்கச் செய்யும்.
      சில மௌனங்கள் உயிர்ப்பிக்கச் செய்யும்.


      அழகான வார்த்தைகள் தங்களது. நன்றி சிவா.

      Delete
  6. Replies
    1. இந்தக் கேள்வ்க்குப் பதில் தெரியலை சீனி

      Delete
  7. வார்த்தைகளின் மௌனம் நல்ல அடர்த்தியான் வரிகள்.மௌனங்கள் எப்போதுமே பேசிக்கொண்டே இருக்கின்றன எங்காவது,யாரிடமாவது/

    ReplyDelete
    Replies
    1. வருக விமலன். முதல் வருகை. மகிழ்வாக.
      மெளனம் எப்போது பேசிக்கொண்டே இருக்கின்றன. புதிய கோணம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விமலன்.

      Delete