Friday, August 20, 2010

தூய்மை இழந்த தாய்மை...



குப்பை மேட்டின் இலை பறந்து
கோபுர உச்சி சென்று சேர்ந்ததாம்
கோபுர பொம்மை உடைந்து வீழ்ந்து
குப்பை மேட்டில் குடி புகுந்ததாம்!

தாய்மை என்ற புனிதக் கோபுரம்
சேய்மை மறந்து தூய்மை இழந்தது
காலக் காற்றின் கடின வீச்சதில்
கோலம் மாறிடும் கொடுமை தானிதோ!!


(படம் த்ந்த சரணுக்கு இக்கவிதைப் படையல்..)


..

9 comments:

  1. ஒற்றைச்சொல்லின் கற்றை வாழ்த்துக்கு மிக்க நன்றி யாதவன்

    ReplyDelete
  2. //தாய்மை என்ற புனிதக் கோபுரம்
    சேய்மை மறந்து தூய்மை இழந்தது //

    நல்லாயிருந்தது..

    ReplyDelete
  3. படம் தந்த பதற்றம் ரியாஸ் அது.. வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி ரியாஸ்...

    ReplyDelete
  4. கிடைப்பதை எல்லாம் பக்குவம்செய்திடும்
    கவிநெருப்பு தான் உங்களுடையது!
    ரொம்ப அருமை!
    சமயங்களில் பின்னூட்டமிட நேரமின்மை எனினும் தங்களுடைய கவிதைகளைப் படிக்கத்தவறுவதில்லை!
    நன்றிகள்!

    ReplyDelete
  5. அன்பு அண்ணாமலை அவர்களே,
    கவி நெருப்பைப் பற்ற வைக்கும் தீக்குச்சியாகத் தங்கள் போன்றோரின் வருகையும் வார்த்தைகளும் அமைந்து ஒளியேற்றுகிறது என்பதே உண்மை.
    //சமயங்களில் பின்னூட்டமிட நேரமின்மை எனினும் தங்களுடைய கவிதைகளைப் படிக்கத்தவறுவதில்லை!// இந்த வார்த்தைகளில்
    நிறைந்த மனதுடன்... தங்களின் பாதச்சுவடை பதிவின் மூலமே காணத்துடிக்கும் விளைவுடன்...அன்புடன்...நெஞ்சார்ந்த நன்றியுடன்...ஆதிரா..

    ReplyDelete
  6. நாய்மை மேல் ஒருவர் தாய்மையாக இருக்கக் கூடாதா.. அ.. ஆ.. அவ்.. வவ் வவ்வ் ;))

    ReplyDelete
  7. யாரை எங்கே வைப்பது என்று தெரியவேண்டாமா ஜெகன் தாய்க்குலத்துக்கு?
    தங்களின் தடம் இவ்வலைப்பூவில் முதன் முறையாகப் பதிந்துள்ளது.. கருத்துரைக்கு மிக்க நன்றி ஜெகன் ஜி.

    ReplyDelete
  8. உண்மையை உடைத்த வரிகள்
    படத்துக்கும் , கருவுக்கு பளு சேர்க்கும் ,
    பாராட்டுக்கள் உங்கள் கவிதை தேரோட்டம்
    இணையத்தில் பவனி வரட்டும்.

    ReplyDelete