ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Tuesday, August 3, 2010

’அந்தத் தருணம்’ஒட்டிவிடத் துடிக்கும்
காதல் சிதறல்

விரலிடுக்கில்
நம்பிக்கையின்
கடைசி துளியும்
வழியும் நேரம்

வேதனை நெருப்பில்
கொதித்து மேலெழும்
சோற்றுத் திறலாய்
நினைவலைகள்

குருதியைக்
குடிக்க வந்த
குளவியின்
ரீங்காரம்
இனிய
இசையானாது போல

மனதின் குதர்க்கம்
வார்த்தையாய் வழிய
காமத்தேனின்
மரணப்பிடியில்
ஈயென
மூழ்கி இழந்தது
பெண்மை தன்னை

புனிதமென நினைத்த
’அந்தத் தருணம்’
இன்று
புதை குழியாய்!...

4 comments:

 1. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

  ReplyDelete
 2. நதிகள் சங்கமிக்கும் இடமும் புனிதம்... பெண் சங்கமித்தலும் புனிதம்... பெண்ணும் நதி தானே!!! நதியும் பெண் தானே!!!

  பெண் என்பவளே புனிதமானவள்... கங்கை எனும் புண்ணிய நதியில் என்னுடல் கலந்தால் என் ஆவி, ஆத்மா, உயிர்க்கும் புண்ணியமாகுமென்றால், பெண் எனும் புனிதத்தை தொடும் அந்த மென்மையான நிகழ்வும், இரு மனமும் இணைந்து இரு உடல்கள் இணையும் அத்தருணமும் புனிதமானது தானே... திருமணம் எனும் வைபோகம் நிகழ்ந்து கணவனும் மனைவியும் ஒன்றாய் சேர்ந்திட நல்ல நாளும், நேரமும் பார்க்கின்றோம், சாந்தி முகூர்த்தம் எனும் சொல்லாய் அதனை அழைக்கின்றோம். புனிதமானது என்பதனாலே அல்லவா?

  பெண், சேயாய் பிறப்பதும் புனிதம் தான்.... ருதுவாய் சமைவதும் புனிதம் தான்... தாயாய் மறுபிறவி எடுப்பதும் புனிதம் தான்...

  பெண், புரியாத புதிரும் அவளே... புனிதமும் அவளே...

  புனிதம் கெடாமல் மனிதம் வளர்ப்போம்... நதியையும், பெண்மையையும் நம் வாழ்வில்...

  ReplyDelete
 3. Thank you for your valuable invitation Sweatha Sanjana. I ii try to visit your site and contribute my articles. Thank u..once again..

  ReplyDelete
 4. புனிதத்திற்கு மிக நீண்ட விளக்கமான விமர்சனம் தந்தமைக்கும், புனிதம் கெடாமல் மனிதம் வளர்க்கும் தங்கள் பண்புக்கும் தலைவணங்கி.. நன்றி கூறுகிறேன்...... நன்றி வாசன்..

  ReplyDelete