Saturday, August 7, 2010

என் மருத்துவ நண்பன் டாக்டர் வசந்த் செந்திலுக்கு




மருத்துவ நண்பா
உன் இதயத்தில் துவண்ட
ஸ்டெத்தாஸ் கோப்
சங்கத் தமிழரின்
நாடியை அளந்தது

சூட்டளவி
தன் உடல் வெப்பத்தைத்
தணித்துக் கொண்டது
உன் கவிதைக்
குடுவையில் மூழ்கி

உன் கரம் ஏந்திய
சிரஞ்சின் முனை பாய்ச்சிய
கவி சத்தால்
பசலை நோயால்
தளர்ந்து போன
தமிழ்க் கன்னியின்
வெளிர் உடலில்
வசந்த கோலம்

மருந்துச் சீட்டில்
நீ எழுதிய
ஹைக்கூக்கள்
ஹெல்த் டானிக்கானது
அவளுக்கு

உடல் உழுது உள்ளீடான
நோய்களுக்கு நீ செய்த
வெட்டுதலும்
சீர் அழகு கூட்டிவிட
நெகிழியினால்
நீ செய்த ஒட்டுதலும்
வனிதைக்கு மட்டுமல்ல
கவிதைக்கும் அழகுதான்

தமிழாயும் மருத்துவனே
உச்சிமுதல் பாதம் வரை
நோய் நாடி நீ தந்த
ஸ்கேன் ரிப்போர்ட்
அத்தனையும்
கவனமாக நீ எழுதிய
ஆய்வுக் கட்டுரைகள்

எட்ட நின்றே
மூலை முடுக்கெங்கும்
பரவி விட்ட
நோய் தீர்க்கும்
லேசர் மருத்துவமே
நீ நடத்தும்
சுற்றிதழ்கள்

இரத்தம் உரிஞ்சும்
அட்டைப் பூச்சிகளே
கொழுத்துக் கொண்டிருக்கும்
மருத்துவ உலகில்
உலகறிய மருத்துவத்தை
மணம் முடித்து
உளமாறக்
கவித்துவத்தைக் காதலிக்கும்
நீ மட்டும்
தமிழ்ப் புலவன் தருமியானாய்

காத்திருத்தல் கன்னிசுகம்
கூட்டி விடும் அருமருந்து
என்றறிந்த காதல் மருத்துவனே
கட்டி அணைத்திடவும்
செங்கனிவாய் வெள்ளெயிற்றுச்
சாறதனைக் கொட்டிக் கொடுத்திடவும்

உன் பெயரின் வசந்தத்தை
வாழ்வில் ஏற்றிடவும்
கனிந்து விட்டாள்
கவிக் காதலியாள்
இனி உனக்குச் சுகஉலகம்
சொந்தமென்று சாற்றுகிறேன்
வாழ்த்துகிறேன் தோழி நான்!




5 comments:

  1. தமிழ் மீது பற்றுக்கொண்ட தங்களுக்கும், தங்களின் நண்பர் வசந்த் செந்தில் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்...தங்களின் நட்பு என்று தொடர இறைவனை வேண்டி...

    தங்களின் நட்புறவின் வலிமை உணரும் வகையில் எனக்குள் இக்கவிதை.

    ReplyDelete
  2. மிக்க நன்றி வாசன்.. தங்களின் நட்பும் தொடர விரும்பும் அன்புடன்...

    ReplyDelete
  3. ஆதிரா,
    உங்களின் இந்த இரண்டாம் வலைப்பூவை இப்போது கண்டேன்.வீடெங்கும் இழைக் கோலமிட்டு, தேவைக்கு காவி பூசி,சாம்பிராணியும்,நேயமும் மணக்க,கொலு வைத்த நேர்த்தியில்,நறுவீசாய் உள்ளது உங்கள் வலைப்பூ .வாழ்த்துக்கள்.
    நிற்க, இந்த கவிதையின் நாயகன் வசந்த் செந்தில் அவர்கள் எனக்கு அறிமுகமானவர்.மென்மையான கவிஞர். என் உயிர் நண்பர் திரு இறையன்பு அவர்கள் அறிமுகப்படுத்தி, என்னை சிலமுறை சந்தித்திருக்கிறார்.அவரின் கவிதை நூல்கள் சிலவும் அன்பளிப்பாய்த் தந்தார்.அவரின் கிருஹப் பிரவேசம் எனும் கதையும் படித்த ஞாபகம்.நாமிருவரும் ஒரே செந்திலைத் தான் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்
    என்றால் அவருடன் மீண்டும் தொடர்பு கொள்ள ஆவலாய் உள்ளேன். என் மின்னஞ்சல் mohanji.ab@gmail.com. அவருக்கு என் அன்பு.(உங்களுக்கும் தான்)

    ReplyDelete
  4. மீண்டும் மோகன்ஜி, சொல்ல மறந்து விட்டேன்.ஒன்று,உங்கள் கவிதை நன்றாய் இருந்தது: இரண்டு நான் திரு செந்திலை சந்தித்தது ௨௦௦1-௨௦௦2 வாகில் சென்னையில். ஆமென்

    ReplyDelete
  5. அன்புள்ள மோகன் ஜி அவர்களே!

    நம் இருவரின் நண்பர் தாங்கள் கூறுகிற, இறையன்பு ஐ ஏ எஸ் அவர்களின் நண்பர் டாக்டர் வசந்த் செந்தில் தான். நல்ல பண்பாளர். தாங்கள் கூறுவது போன்று மென்மையான கவிஞர். அது மட்டுமல்ல அவர் தமிழ் படித்தவர்களை விட சிறந்த முறையில் ஆழமான தமிழ் நூல்களை எழுதியுள்ளார்.

    அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களைப் பற்றிக் கூறினேன். அவரும் சற்று நினைவு வருகிற்து என்றார்.
    தன்களின் விபரம் ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. விளக்கமாகக் கூற. ப்ரொஃபைலில் இருந்த விபரங்களைக் கூறினேன்.
    எனக்கு மிக்க மகிழ்ச்சி. பழகிப் பிரிந்த நண்பர்களை நினைவூட்டியதில்.

    என் வலைத்தளத்தில் பதிந்த தங்கள் பாதச்சுவடுகளுக்கு மனமார்ந்த நன்றி..தங்களின் அழகிய பாராட்டுக்கும் மிக்க நன்றி மோகன் ஜி.

    ReplyDelete