சாதி
சாதியை மதித்து சதிசெயும் அரசியல்வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்து
மேதினியே சாதியின் பிடியில்! துன்பச்
சேதினை உடைப்பவர் யாரிங்கு சொல்வீர்!
சதியின் குழந்தைகள் சாதிக ளாயின
மதியில் வெல்லவே நீதி தேவையோ
விதியின் வந்ததாய் நின்று வாட்டிடும்
கதியை ஓட்டிட சேர்ந்து வாழுவோம்
மதம்
சக(சா)தியில் சிக்கிய கால்களைக் கழுவிடப்பதமாய் வார்த்தனர் சலுகை நீரதை
மதமெனும் தீயதை மூ(ஊ)ட்டிக் கொலுத்தினர்
குமைந்தது மானுடம் வெந்தது கருகியே
இமயமும் குமரியும் இணைந்தஇப் பாரதம்
சமயங்கள் இணைந்திட வழிசொன்ன நூலகம்
தமயனும் தம்பியும் வேறு மதமெனில்
சுமந்திட்ட ஓர்த்தாய்க் கிழுக்கு அல்லவா?
மொழி
பேசிடும் பேச்சோ உணர்த்திடும் கருவியேபூசியப் பூச்சினால் கண்டது பேதம்
மூ(ச்)சிடும் ஒலியினில் பேதம் உரைத்து
வீசினர் உயிர்களை மொழியெனும் வாளினால்
குழலும் யாழும் ஓசையில் வேறுதான்
துளையில் விழுவது; நரம்பில் எழுவது;
இசையெனும் அமைப்பில் இரண்டும் வேறல
நசையுடன் பேசிட எம்மொழி தாழ்ந்தது?
நாடு
எல்லைகள் இன்றி அன்புப் பயிர்செயதொல்லைகள் தருவதோ நாட்டுப் பற்றது?
நாடு என்பதே ’நடு’வின் தொடக்கமே!
நடுதல் என்பது அன்பை நடுவதே!
நாடுதல் என்றே கொள்ளினும் விரும்புதல்;
தேடுதல் என்றும் சொல்லலாம். எவர்க்கும்
வாடுதல் செய்யும் புன்மை தேடி
கேடுகள் செய்வரோ பகுத்தறி வாளர்?
பணம்
செல்வம் என்பது சிந்தை நிறைவதுபோதும் என்பவன் செல்வன் ஆகிறான்
பேராசை பேயவன் ஏழை ஆகிறான்
பேதம் ஏனிதில்? வாதம் வீணதே!!
கன்று குடித்த பால்மீதம் யாவையும்
நன்று தந்திடும் ஆவின்தன் மைபோல்
நின்று நிலைத்திடா நீசக் காசதை
சென்று சேர்த்திடும் ஏழை வயிறதில்!
ஐம்பெரும் பிடியில்
ஐம்பெரும் பிடியில் அகப்பட்ட மனிதன்ஐயறிவுயிர் போல திரிந்திடும் இழிநிலை
பையவே மாறிட வழியின்றி மேலும்
ஐந்தறிவும் நகும் பகுத்தறி யாநிலை
சொல்லவும் கூடலை சாதியும் சமயமும்
மொழியும் எல்லையும் பணமும் என்ற
ஐம்பிடி இருக்கில் தவித்திடும் மானுடன்
பகுத்தறி யாநிலை மெல்லவும் கூடலை!
.
எல்லைகள் இன்றி அன்புப் பயிர்செய
ReplyDeleteதொல்லைகள் தருவதோ நாட்டுப் பற்றது?
நாடு என்பதே ’நடு’வின் தொடக்கமே!
நடுதல் என்பது அன்பை நடுவதே!
-------அருமையான மொழி வளம் அருவியாய் கொட்டும் கவிதைகள்.தமிழின் இனிமை சொட்டும் வார்த்தைகள்.....இனிமையம்மா!இனிமை!
அன்பு நூருல்,
ReplyDeleteதங்கள் போன்றோரின் பாராட்டு எனக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுக்கிறது. இந்த நம்பிக்கையை என்றும் காப்பாற்ற வேண்டுமே அச்சத்தையும் கொடுக்கிறது. மிக்க நன்றி நூருல் தங்கள் தொடரும் வருகைக்கும் பாராட்டுக்கும்..
ஹாய் ஆதிரா!
ReplyDeleteஎப்டியிருக்கீங்க?
குழலும் யாழும் ஓசையில் வேறுதான்
துளையில் விழுவது; நரம்பில் எழுவது;
இசையெனும் அமைப்பில் இரண்டும் வேறல
நசையுடன் பேசிட எம்மொழி தாழ்ந்தது?
செம க்ரேட் !
நான நலமா இருக்கேன் ரோஸ். நீங்க எப்படி இருக்கீங்க? உங்களோட விசாரிப்பும், அன்பும் நெசமாகவே என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ரோஸ். உங்க வருகைக்கும் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteபதிவு அருமை
ReplyDeleteமுதல் முதல் பாதம் பதித்து உள்ளீர்கள் வேலுஜி. மீண்டும் மீண்டும் தங்கள் பாதம் பதிய வேண்டும் இக்குடிலில்...மிக்க நன்றியும் அன்பும்...
ReplyDelete