சுவர்க்கத்திற்குச் செல்லும்
வழியறியாது
பையூரில் பயணித்த
குட்டித் தேவதைகள்
வந்திறங்கின
அந்த சிவகாசியில்
சூரியக் குழம்புடன்
வெண்மேகத்துக்குள் ஒளிந்திருந்த
இடிகளை பொடித்து
இட்டும் தொட்டும்
கனவில் பூத்த
வண்ணம் சேர்த்தும்
நமக்கான
விருந்தினைத் தயாரிக்கின்றன
தேவதைகளின்
சின்னஞ்சிறு விரல்கள்
வெடிகளாக
நிலவை
எட்டி உடைத்து
தெறித்து விடுகிறது
அந்தத் திருநாள் கொண்டாட்டம்
வெடித்துச் சிதறிய
வெண்ணிலவின் சில்லுகள்தோறும்
விபத்தில் சிதறிய
அந்தப் மோனாலிசாக்களின்
ஏக்க முகங்கள்!!
ReplyDeleteதெரிந்தாலும் வாண வேடிக்கைக்களில் அந்தச் சிறார்களின் குறுஞ்சிரிப்பையும் காண வேண்டும் . அதற்குத்தானே அவ்வளவு பாடு படுகிறார்கள். குழந்தைத் தொழிலாளிகளை மறுக்க வேண்டும்.அதில் முனைப்பு தேவை.
அதைத்தான் சொல்லி இருக்கிறேன் ஐயா. நன்றி
Deleteஅருமை! சிவகாசி தேவதைகளை வர்ணித்த சிறப்பான கவிதை! அந்த சிறுபிஞ்சுகளுக்காவது பட்டாசு கொளுத்துவோம்! குழந்தை தொழிலாளிகளை தடை செய்ய ஒத்துழைப்போம்!
ReplyDeleteஅந்த சிறு பிஞ்சுகளுக்காகப் பட்டாசு கொளுத்தாது விடுவது இக்கவிதையின் நோக்கம் தோழர் சுரேஷ்.
Deleteமுதல் வருகை மகிழ்ச்சியாக... முதல் கருத்து நிறைவாக..
மனம் நிறைந்த நன்றிகள் சுரேஷ்.
படமும் பாடலும் மனதைத் தைத்தன....
ReplyDeleteமிக்க நன்றி வெங்கட்
Deletevekkangolla sythathu..
ReplyDeleteungalathu padam...
kuzhanthai thozhilaali murai -
izhiya vendum...
ஆம் சீனி. வெட்கம் மட்டுமல்ல. வேதனையும். குழந்தைகளை இப்படிப் பயன்படுத்திக் கொண்டு நாம் வல்லரசு கனவு காண்கிறோம்.
Deleteபடமே சோகக் கவிதை. படத்தைப் பார்த்ததும் மேலே படிக்கவே தோணலிங்க.
ReplyDeleteநன்றி அப்பாதுரை.
Delete