Wednesday, November 7, 2012

ஏற்றங்களை மாற்றம் செய்!



உழைப்புச் சாவியால் பூட்டிக் கிடக்கும்
புலன்களை விடுதலை செய்

தேம்பும் குழந்தை மனத்தை
தேக்கு மரத்தால் இழைத்து விடு

உதட்டு முற்றத்தில் மகரந்தப்
பூக்களின் புன்னகை தேக்கு

பருந்தின் கூரிய பார்வையை
கீழ்மையகற்றி மேல்நோக்கி வீசு

விரல் நுனிகளால்
உலக விசையை முடுக்கு

சீமைக் குதிரையின் சீரும் குழம்படியை
குதிகாலில் பூட்டிக்கொள்

இதய இருட்டை
தண்ணொளியால் நிரப்பு

கிழிபடாத ஓசோனாய்
அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சு

வெற்றி திராவகத்தைத்
தேகமெங்கும் தெளித்துக் கொள்

எட்டியும் அருகியும் இருக்கும்
ஏற்றங்களை உனதாக மாற்றம் செய்!

2 comments:

  1. ப்ரூஸ்லீ படம் பார்த்த எழுச்சி கவிதையைப் படித்ததும். குழந்தை இதயம் - தேக்கு மரம், class!
    குழம்பா, குளம்பா? ரெண்டும் ஒண்ணு தானா?

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை நீங்களாவது சந்தேகம் கேட்டீர்களே. அகராதி பார்த்தேன். குளம்புதான் சரியானது. நாம் எப்பவும் அடுப்படியில நிக்கறதால குழம்பி குழம்புன்னு எழுதிட்டேன். உண்மையா எனக்கும் தெரியலை.
      சுட்டிக்காட்டிய விரல்களுக்கு என்ன கொடுக்கலாம். அங்க விலையுயர்ந்த ஒரு மோதிரம் வாங்கி அணிந்து கொள்ளுங்கள் அப்பாதுரை என் பரிசாக.

      Delete