ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Monday, November 5, 2012

பாவ ஆத்மாவாய்...கவனிப்பதும்
கவனிக்காததும்
கவனித்தும்
கவனிக்காதது போல்
கடப்பதும்
உனக்கான 
வாடிக்கையாகிப் போனது

நீ

கவனிக்கும்போது
பரிசுத்த ஆத்மாவாய்
உணர்வதும்
கவனிக்காத போது
பாவ ஆத்மாவாய்
கரைந்து
காணாமல் போவதும்
எனக்கான
வாடிக்கையாகிப் போனது!

4 comments:

  1. தன்னம்பிக்கையை ஊட்டும் கவிதை :)

    ReplyDelete
    Replies
    1. ம்ம் நன்றி அப்பாதுரை

      Delete