Thursday, November 1, 2012

நாம் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்




ஆய்ந்தாய்ந்து
அறிவுப்போதை தலைக்கேறி
அக்கினி முட்டைகளை
வார்த்தைகளாய் 
பொறிக்கின்றன
அறிஞ அசுரங்கள்

இருட்டில் சமைத்த
சட்டங்களால்
வயிற்றுப் 
பள்ளத்தாக்குகளில்
நெருப்புகளை
இட்டு நிரப்புகின்றன
அதிகார அசுரங்கள்

மேகத்தால் மூடி மறைத்தாலும்
நீண்டு கொண்டே போகும்
வானமாய்
கைநீட்டும்
கையூட்டு அசுரங்கள்

தன் குட்டிகளை விழுங்கி
தன்னுயிர் வளர்க்கும்
பாம்புக் குவியல்களாய்
பிணம் அவித்து
தனம் குவிக்கும்
இனவெறி அசுரங்கள்

என்று எங்கும்
நர அசுரங்கள்
வளர்ந்து கொண்டிருக்கின்றன
வாமனங்களாக
தீர்க்க ஆயுளுடன்

நாம் தீபாவளி
கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்
நரகாசூரனை அழித்ததாக
நினைத்து



(இந்தக் கவிதை நவம்பர் 2012 தமிழ் நானூறு இதழில் வெளியானது. நன்றி தமிழ் நானூறு)

7 comments:

  1. சிறப்பான கவிதை. எத்தனை எத்தனை நரகாசுரர்கள் இன்னும் பூமியில்.

    சின்ன வேண்டுகோள்... கொஞ்சம் ஃபாண்ட் அளவினை அதிகப்படுத்துங்களேன் - கருப்புப் பின்னணியில் சிறிய எழுத்துகளைப் படிப்பதில் சிரமம் இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் சார். மன்னிக்கனும் உங்கள கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தமைக்கு. எழுத்துருவைப் பெரிதாக்கி விட்டேன் சார்.

      Delete
  2. அழகான கவிதை...
    வரிகளில் செய்யவேண்டிய சாதனைகள் எவ்வளவோ இருக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சிட்டுக்குருவி

      Delete
  3. சுடுகிறது கவிதை.
    அறிஞ அசுரங்களா? புரியவில்லையே?
    கண்மூடி அசுரங்களைவிட கொடிய அசுரம் உண்டா? அதையும் கொண்டாடுகிறோமே!!

    ReplyDelete
  4. அறிஞர்களிடையே வழக்கு வரைப் போகும் வாக்குவாதங்களைத்தான் அப்படிச் சொன்னேன் அப்பாதுரை.

    எல்லாம் ஒரு நம்பிக்கை. மூட நம்பிக்கை.. என்ன செய்ய?

    ReplyDelete