Sunday, August 15, 2010

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSnDW-vp9zF85zDxWH1SXW-K-WHMREVs4Cl0fuUxtrGZzroPU8&t=1&usg=__vhv2uReWxbDpd8SgO8XrqRFiS1A=

உடன் பிறந்தவர்
மணம் புரிந்தவர்
ஆகும் விந்தையைக்
கண்டனம் என்று
காமுகன் ஒருவனும்
கொடுமன ஒருத்தியும்
நகைமொழி கூறிட

கலங்கிய
காரிகை கண்களும்
கோவலன் நெஞ்சமும்
காவுந்தி என்ற
சாது மிரண்டதும்
அற்ப மனிதர்கள்
நரிகள் ஆனதும்
கதையில் கேட்டனம்

உடன் பிறந்தவர்
ஒரு மனமானதும்
திருமணம் கொண்டதும்
நேரில் கண்டனம்
நெஞ்சு பதைக்கவே

மண்ணின் யாவையும்
மாற்றும் விந்தையர்
பிரம்மன் செயலையும்
திருத்திச் செய்திட
கருவை இணைத்தனர்
செயற்கை முறையினில்
உயிர்கள் இரண்டு அதில்
உருவம் பெற்றன!

ஒட்டிப் பிறந்த
இரட்டைக் குழந்தையை
வெட்டிப் பிரித்தனர்
பணமெனும் கத்தியால்
பெற்ற பாவியும்
விற்ற பாவியும்

வேற்று மண்ணதில் 
நட்ட போத்துக்கள்
துளிர் விட்டன
பரிவ ஆசைகள் 
தளிர் விட்டன

ஒன்றாய்ப் பிறந்த
பாசப்பிணைப்பா
இரண்டற கலக்கும்
நேசப்பிணைப்பா
கள்ளப் பெற்றோரின்
கபடம் அறியாது

கண் கலந்தனர்
காதல் கொண்டனர்
சாதல் வரையிலும்
நல்லறம் பேணும்
இல்லறக் குடிலில்
இனிதே புகுந்தனர்

பெற்ற கணக்கிலும்
விற்ற கணக்கிலும்
புதைந்த உண்மைகள்
புரிந்து விட்டன
உடன் பிறப்பென்ற்
பழங் கணக்கதைப்
புரட்டிப் போட்டன

வழக்குத் தொடர்வதா
புதுமைக் கணக்குடன்
வாழ்வு தொடர்வதா

உயிர் எழுத்துக்கள்
ஒன்றாய் ஆனது
தலையெழுத்து
வேறாய்ப் போனது
இந்தியர் அனைவரும்
என் உடன் பிறந்தவர்
உறுதி மொழி
உண்மையானது!!!!


(இக்கவிதை ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் காதலித்து திருமணம் புரிந்து கொண்டுள்ளனர்.. விபரம் அறிந்த பின் என்ன செய்வது என்று அறியாமல் வழக்குத்தொடர்ந்துள்ளனர் என்று நாளிதழில் படித்த செய்திக்கவிதை)



6 comments:

  1. மிக்க நன்றி யாதவன்.

    ReplyDelete
  2. ஒட்டி பிறந்த போது குறையில்லாமல் பிறந்து
    ஒட்டி பிறந்த கதையே தெரியாமல் வளர்ந்து
    ஒட்டி உறவாட இன்று அதுவே குறையானது
    ஒட்டி பிறந்தவர்கள் எதை வெட்டுதென்று ...

    சிந்திக்க பல விடயங்கள் இதில்... சிந்திக்க நினைத்தால் உயிர் வாழ முடியாது... உயிர் வாழவும் கூடாது...

    //“இந்தியர் அனைவரும்
    என் உடன் பிறந்தவர்”//

    வரிகள் உயிர் பெறுகின்றனவோ?

    ReplyDelete
  3. ஒட்டி பிறந்தவர்கள் எதை வெட்டுதென்று ...

    சிந்திக்க பல விடயங்கள் இதில்... சிந்திக்க நினைத்தால் உயிர் வாழ முடியாது... உயிர் வாழவும் கூடாது...

    ஆம் வாசன்.. அந்தக் குழப்பத்தில் அந்த இரு உள்ளங்களும்.. என்ன செய்ய..

    கருத்துக்கு மிக்க நன்றி வாசன்..

    ReplyDelete
  4. நல்ல அருமையான பதிவு

    http://usetamil.forumotion.com

    ReplyDelete
  5. வருகை புரிந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி தமிழர்களின் சிந்தனைக் களம்..

    ReplyDelete