Wednesday, November 21, 2012

பிரிகள்




வரவுக்கும் 
செலவுக்கும்
இடையேயான
இழுவைப் பந்தயத்தில்
இழுகயிறாய் 
மாட்டி நைந்து போகிறது
பாசம் பந்தம்
என்னும்
உறவுப் 
பிரிகளெல்லாம் 

11 comments:


  1. தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம் ( உறவும் சேர்த்துக் கொள்ளுங்கள் ) காசுமுன் செல்லாதடி. குதம்பாய் (சரி குதம்பாய் என்பது யார்.?) ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜி.எம்.பி ஐயா. நல்லதொரு குதம்பைச் சித்தர் பாடலை நினைவூட்டிச் சென்றுள்ளீர்கள். காசின் முன் எதுவும் செல்லாது........ ரசித்தமைக்கும் நன்றி ஐயா.

      Delete
    2. குதம்பாய் என்பது கேட்கும் பெண். அவ்வளவுதான். சித்தர்கள் பத்தர்கள் என்று யாராயிருந்தாலும் பெண்களுக்குத்தான் அறிவுரைகள் கூறுவார்கள். இந்த இலக்கிய முறையை மகடூஉ முன்னிலை என்று இலக்கியத்தில் சுட்டுவார்கள். மகடு என்றால் மகள்,பெண்

      Delete
  2. வரவும் செலவும்தான் வாழ்வின் மையப் பொருள்களாக இன்றைய உலகம் என்ன செய்வது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சிட்டுக்குருவி. உங்களைப் போல இருந்தால் பரவாயில்லை. பறந்து சென்றோமா.. ஏதோ கிடைத்ததைக் கொத்தித் தின்றோமா என்றிருந்தால்...

      அதுங்க கஷ்டம் அதுங்களுக்குத்தான் தெரியும். செல்போன் டவர்னால அழியும் கஷ்டத்தைச் சொல்லிப் புலம்புகிறவை அவை.

      Delete
  3. சிறந்த கருத்தை உணர்த்தும் சின்ன கவிதை வரிகள்! அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  4. சிறிய கவிதை பெரியதொரு கருத்து.
    உறவுப் பிரிகளைக் கட்டிப் போட்டிருப்பதும் காசு என்னும் கயிறு தான் .

    ReplyDelete
  5. ம‌த்திய‌த‌ர‌ ம‌க்க‌ளின் இழுபறியே இது தான்.
    இந்த‌ ப‌ட‌மும் க‌விதையும் போல்,
    உங்க‌ள் க‌ருத்துட‌ன் ஒத்துப் போகிற‌து இவ்வுல‌கு.

    ReplyDelete