ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Monday, July 9, 2012

பிரபஞ்சம் அறியாமல்..

அடை காப்பதில்
உனக்கும் எனக்கும்
எத்தனை வேறுபாடுகள்

ஓட்டுக்குள்
ஜணனித்த
உயிரை
உடல் சூட்டில்
உயிர்ப்பித்து
பிரபஞ்ச வெளியில்
உலவ விட
நீ
அடை காக்கிறாய்!

நானும்
அடைகாக்கிறேன்`

எந்தச் சூட்டிலும்
பொறிந்து விடாத
மரணித்துப் போன
காதலை
பிரபஞ்சம் அறியாமல்
மன மயாணத்துள்
புதைத்து
வைக்க
நான்
அடைகாக்கிறேன்!
 

6 comments:

 1. ean intha veri!


  varuththa veri!

  varuththamaana vari!

  ReplyDelete
  Replies
  1. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா.... வருத்தப் படாதீங்க சீனி. நன்றி

   Delete
 2. Replies
  1. நன்றி வரலாற்று சுவடுகள்

   Delete
 3. //எந்தச் சூட்டிலும்
  பொறிந்து விடாத
  மரணித்துப் போன
  காதலை
  ......
  நான்
  அடைகாக்கிறேன்! //
  அருமையான வரிகள் .... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. விஜி பார்த்திபன், தங்கள் முதல் வருகை மிக்க மகிழ்ச்சியாக. வருக! வருக! கருத்துக்கு நன்றி.

   Delete