பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!
கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!
படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!
ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!
ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!
கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!
நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!
ஆதிரா
உலகத்தில் நடக்கும் எல்லா விந்தைகளும் கண்டுபிடிப்புகளுமே ஒரு கணத்தில் நிகழும் துரித மாற்றங்களால் தான்...
ReplyDeleteஅறிவியல் வித்தகர்கள் அசத்தியதும் கண நேர மின்னல் உதித்தல்களால் தானே...
இங்கே உலகின் பரிணாம மாற்றங்களும் காரண காரியங்களால் தான் ...
காதலி அல்லது காதலனின் இந்த ரசாயனமாற்றத்தை மிகஅருமையாக அளித்துள்ளீர்கள் ஆதிரா...
சிறப்புக்கவிஞரின் சிறந்த தொரு கவிதைக்கு பாராட்டுக்கள்...!
கலைவேந்தன்..
ஒரு வேளை இந்தப் பதிவை நான் பார்க்காமல் இருந்திருந்தால்..........
ReplyDeleteநல்ல படைப்பாளர் ஒருரை அறியாமலேயே இருந்திருப்பேன்..
மின்னலாய் வந்து கன்னல் தமிழில் பாராட்டும் தங்கள் அன்புள்ளத்திற்கு, கலையுணர்வுக்கு ஆதிராவின் நன்றி என்றென்றும் உரியது கலை.
ReplyDeleteபாசமாக ஒரு பார்வை வீச நேரமில்லாத இவ்வேக உலகில் என் பதிவைப் படித்துப் பாராட்டிய தங்கள் அன்புள்ளத்திற்கு என் உள்ளத்து ஆழத்தின் நன்றி என்றென்றும் உரியது குணா அவர்களே.
ReplyDeleteஅருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புள்ள ஆதிரா,
ReplyDeleteஇக்கவியை(காதலை) படித்து, என் இதயத்தில் தோன்றிய மகிழ்ச்சியை, வார்த்தையின் வடிவில் உயிர்(ரு)கொடுத்து உங்களை வாழ்த்தாமல், வரிகளை நான் மறந்து பதிவு செய்யாமல் சென்றால்...
நான் மண்ணாகி போவேன்
காதல் செய்யும்
சொர்கமிதில்!!!
கண்களும் கவிபாடும்...
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்...
என்றால்? எங்கள் ஆதிரா அவர்களால்
காவியமே பாடமுடியும்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சரவணன்.
ReplyDeleteபாடிடத்தான் எண்ணுகிறது இந்தக் கட்டுத்தறியும் காதலிலே காவியம். தங்களைப் போன்ற அன்புள்ளங்களின் வாழ்த்தும் பாராட்டும் அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில்...
ReplyDeleteநன்றி வாசன்
ஆதிரா மேடம் உங்களுடைய இணைத்தை இன்றுதான் படித்தேன் அத்தனையும் முத்துபோல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள்...
ReplyDeletehttp://mufeessahida.blogspot.com/
அன்பு முஃபீஸ்,
ReplyDeleteமுதலில் தாமதமான பதிலுரைக்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன். அன்பான தங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி முஃபிஸ். நானும் தங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட இதோ கிளம்பி விட்டேன்..