உணர்வுகளை
கனவுகளை
லட்சியத்தை
ஒவ்வொரு
இறகாக
உதிரச் செய்த
உறவுகளை
உதிர்த்துவிட்டு
பறக்கத் தொடங்கினேன்!!
சிறகே இல்லாமலும்
பறக்க
கற்றுக் கொடுத்தது
நட்பு !!!!!!!!!
(இக்கவிதை என்னுள் அடங்கி என்னை விழுங்கி எல்லாமுமாகி நிற்கின்ற என் தோழி ராஜிக்கு சமர்ப்பணம்)
வெறும் வெளியில் காற்றைத் தருவது நட்பு
ReplyDeleteபொறுமையை பொறுமையாய்க் கற்றுத்தருவது நட்பு
சிறுமையை உதறிச் சிந்திக்க வைப்பது நட்பு
வெறுமையை அழித்து வாழவைப்பது நட்பு..!
அத்தகைய நட்புக்கு உருவகமே பாராட்டுக்கள்..!
தங்கள் பாராட்டுக்கும் கருத்துரைக்கும் என் கருத்தை உடன் படுதலுக்கும் மிக்க நன்றி கலை.
ReplyDeleteஎல்லோருக்கும் வைக்காது இப்படி ஒரு நட்பு எல்லோரும் வரைவதில்லை இப்படி ஒரு கவிதை
ReplyDeleteஆம் மணி.. அது உண்மை.. நான் அதில் கொடுத்து வைத்தவள். நான் பல நேரஙகளில் வியந்துள்ளேன் அவளின் பாசத்தை எண்ணி, நட்பை எண்ணி, அன்பை எண்ணி, சொல்ல வார்த்தைகளின்றி. நானென்றால் அது அவளும் நானும், அவ்ளென்றால் அது நானும் அவளும்..’இருதலை புள்ளின் ஓருயிர்’ என்று சங்கத்தில் தோழிக்கு வர்ணனை செய்வார்கள்.. அவளைப் பொருத்தமட்டில் அது உண்மை.. மிக்க நன்றி அஜித் அவளைப் பற்றிய உணர்வைப் பதிய வாய்ப்பாக கூறிய கருத்துரைக்கு...
ReplyDeleteதங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .
ReplyDeleteada nalla
ReplyDeletekavithai!
superb
ReplyDeleteமுதல் வருகை.. முதல் வாழ்த்து இரண்டும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி அருள்.
Deleteதாமதமான நன்றி நவிலல். இன்றுதான் என் வலைப்பூவில் நுழைந்தேன். தங்கள் பதிவைப் பார்த்தேன். ஓடோடி வந்தேன். நன்றி கூற.
ReplyDeleteபூக்களில் இத்தனை பூக்களா? அவைகளில் இத்தனை குணங்களா என்று வியந்து நிற்கையில் வலைப்பூக்களிலும் இத்தனை வகைகள் என்று அவற்றை பல்லாயிரக்கணக்கான கண்களுக்கு அறிமுகப்படுத்திய அன்புக்கு மனமார்ந்த நன்றிகள் சசிகலா அவர்களே.
முதல் முறையாக வந்த போதே என்னை அறிமுகம் செய்தள்ளீர்கள். மீண்டும் மீண்டும் நன்றி.
தங்களது முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சீனி அவர்களே.
ReplyDelete