Monday, March 15, 2010

மனிதம் வாழலாம்!!!



http://www.franksinger.com/cd001/images/owtUnity250.jpg

இந்துவாய் இருப்பதில்
இன்னல்கள் இல்லையோ!
எண்ணற்ற இறைவர்!
யாரை நினைப்பது?
கதைகளைக் கேட்டே
காலம் கழிந்தது!
இன்னும் தெய்வங்கள்
நெடுங் கணக்கானது!!


பரிசுத்தம் ஆகுமா

கிருத்துவன் என்பதால்!

ஆடுகள் தவறி

பாதைகள் மாறலாம்!

தலைகளை அறுத்திடும்

சாதிக் கொடுங்கோல்

மேய்ப்பன் கைகளின்

ஆயுதம் ஆவதோ!!



மனிதர் யாவரும்

ஒன்றென்று ஓதினால்

மக்கதுப் பயணம்

புனிதம் பெற்றிடும்!

ஈச்ச மரங்களும்

போதி மரங்களும்

இணைந்து மாறிடும்

இன்பச் சோலையாய்!!


அன்னை என்பதும்
ஆத்தா என்பதும்
தாய்மை நிரம்பிய
பன்மொழி அல்லவா!
கருணை மேரியும்
முத்து மாறியும்
மதங்கள் மாற்றிய
மென்மொழி அல்லவா!!



சாமம் இசைக்கலாம்
ஏசுவின் காணத்தை!
அதர்வனப் புதிரை
புத்தர் விளக்கலாம்!

ஹிஜிரத்துள் யஜுரின்

விழுதுகள் ஊன்றலாம்!
மதமிழந்த வேதம் யாவிலும்
மனிதம் வாழலாம்!!!!



ஆதிரா..

4 comments:

  1. மனிதம் வாழ மகத்தான பணிபுரிந்தோர் குறைவே என்றாலும் அவர் உலத்தின் கண்களாய் இன்றும் போற்றப்படுபவர். நிகழ்கால தெரசாவும் அன்பு எனும் புதுமதம் கண்டவ்ரே... எவ்வழிச்செல்வதென திசையறியாது திகைப்போரே.... அன்புவழி நட்புவழி அறவழி .... போற்றுவீரே...

    அருமையான கவிதை தோழி... நீ வாழி...

    அன்புடன்
    கலை

    ReplyDelete
  2. arumai. love is god. god is every where. god is no where . when v realize god is now here.

    ReplyDelete
  3. தங்கள் வாழ்த்துக்கும் க்ருத்துக்கும் மிக்க நன்றி கலை(சஞ்சை ராமசாமி)

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி மதுரை சரவணன் அவர்களே.

    ReplyDelete