மெல்ல முகம் பார்க்கும்
சின்னக் குழந்தைகளின்
பிஞ்சு விரல்களிடும்
கோலமெனும்
தண்ணீர்க் கோடு!!
கரையில்லாத அன்பைக்
காணாது கண்டுவிட்டால்
விழியோரம் போட்டுவிடும்
நெஞ்சத்தின்
கண்ணீர்க் கோடு!!
பொங்கிவரும் காதலதை
பொய்முகம் காட்டிவிட்டு
மறைத்துவிடும் கன்னிக்கு
நாணமெனும்
பெருமைக் கோடு!!
ஓயாது உழைத்தபின்னும்
ஒட்டிய வயிறுகொண்ட
பாட்டாளி பரம்பரைக்கு
பற்றாத குறைவென்னும்
வறுமைக் கோடு!!
சோர்வில்லா வீரனுக்கு
சொந்தமண்ணாம் நாடுகாக்கும்
சொப்பனமே
வீரமென்னும்
எல்லைக் கோடு!!
பொங்குதமிழ் கவிதைககு
தொடைஎன்ற தளைஎன்ற
எதுகைமோணை இலக்கணமே
முரண்என்னும்
தொல்லைக் கோடு!!
கட்டழகுப் பெட்டகத்தை
கட்டிலிலே முத்தமிட
விளைவதுதான்
மழலைஎன்னும்
மஞ்சக் கோடு !!
கட்டிலறை முத்துகளுள்
ஒருமுத்து வரமென்றும்
மருமுத்து புறமென்றும்
எறிவதுதான்
பேதமென்னும்
வஞ்சக் கோடு!!
ஆதிரா..
பருவம் கடந்தும் பூத்துக்குலுங்காத பேரிளம்பெண்ணின் சோகம் விவரிக்கும் இந்த கவிதை அழகான சொல்நயஙகளால் வசீகரிக்கிறது..
ReplyDeleteமாற்றார் கைபடும்முன் பறித்துப்போக தன் உற்றானின் வரவை நோக்கும் அந்த காரிகையின் கோரிக்கை கண்முன் வந்து சோகம் பிழிகிறது...
அன்றாடம் வேலைப் புயலில் சிக்குண்டு சீரழியும் எண்ணற்ற பெண்களின் நிலையை இதைவிட கடுமையாக கூற முடியுமா என்பதை வியக்கிறேன்...
அருமையான கவிதை ஆதிரா....! உங்கள் கவிச்சிறப்பு என்னை வசீகரிக்கிறது.
வாழ்த்துகள்...!
கலை
This comment has been removed by the author.
ReplyDeleteபொங்குதமிழ் கவிதைககு
ReplyDeleteதொடைஎன்ற தளைஎன்ற
எதுகைமோணை இலக்கணமே
முரண்என்னும்
தொல்லைக் கோடு!!
அத்தை!
இத்தொல்லைகளை கட்டி உறவாடும்
தமிழ்க் காதலி நீ!!
தமிழின் காதலி நீ!!!
செல்லம் அதோடு உன்னையும் கட்டி உறவாடும் கெள காதலியும் நான். தேங்க் யூடா சுவீட்டி.
ReplyDeleteஅன்புடன்
அத்தை.
தங்க்ள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கலை..
ReplyDelete