Sunday, March 14, 2010

ஒற்றை நோக்கு....

charlize-theron1


உன்
ஒற்றை நோக்கு

உடலுள்
இன்பக கங்கையாய்
பிராவாகிக்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு

திசுக்களையெல்லாம்
திராவக குழம்பாய்
மாற்றி விடுகிறது!!

உன்
ஒற்றை நோக்கு

அணுக்களை வண்ண
உயித்திரள் பூக்களாய்
மலரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு

உயிரோடு உறவான
ஆவியைக் கூட
உலரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு

ஆனந்த மணிகளை
கண்களின் ஓரம்
துளிரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு

புறியாத புதிர்களை
இன்ப இலக்கியமாய்
ஒளிரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கை
நோக்கியதால்.......
.
இன்று
சுரத்துடன் இணைந்து
சுருதியாகி
இசைக்கின்றேன்!!

உன்
நோக்கு அனைத்திற்கும்

இன்பமாய்
இசைகின்றேன்!!!!!!!



ஆதிரா..

2 comments:

  1. கம்பர் எழுதி இருப்பார்:

    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்....

    வள்ளுவர் எழுதி இருப்பார்:

    ஒருநோக்கு நோயூட்டும் மறு நோக்கு அதை தீர்க்கும்..

    அப்படி பெருங்கவிஞர்கள் எல்லோருமே இந்த நோக்கு பற்றி எழுதி இருக்காங்க நிறைய..

    அந்த வரிசையில் இங்கே நம் அருமைக்கவிதாயினி ஆதிரா எழுதிய நோக்கு மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கிறது என்று சொன்னால் மிகை இல்லை...

    எந்த வரிகளைச் சொல்வது எதைவிடுவது...?

    எல்லா வரிகளுமே உணர்வில் புகுந்து உயிரை வருடுகிறது...

    மிகவும் உணர்ந்து ரசித்தேன்... ருசித்தேன்...

    பாராட்டுக்கள் ஆதிரா...!

    கலை.

    ReplyDelete
  2. உங்கள் பாராட்டுக்கள் எல்லாமே என் விழிவழி மனதில் புகுந்து நெஞ்சில் நிலையாக நின்று இனிக்கிறது கலை..மிக்க நன்றி,,

    ReplyDelete