ஏகதேசமாக்
நீ உதிர்த்த
எல்லா சொற்களையும்
சிந்தாமல் சிதறாமல்
ஒரு மூலைகூட மடங்காமல்
புத்தகமாக்கி
சேமித்து வைத்திருக்கிறேன்
என் மனப் பையில்....
அவசர அவசரமாக மேய்ந்துவிட்டு
ஆற அமர அசைபோடும்
எருமையாய்
ஒவ்வொன்றாக
சுவைத்தபோதுதான் தெரிந்தது!!
அரிதாரம் அணிந்திருந்த அவை
சொற்கள் அல்ல..
ஒவ்வொன்றும் தங்க முலம் பூசிய
சயனைடு குப்பிகள் என்று....
உன் வார்த்தைகளால்
வாழ்விழந்த
இறுதி மனம்
என்னுடையதாக இருக்கட்டும் !
இனியாவது இதழ்களை மட்டும்
பேச விடு
உன் உள்ளத்து நஞ்சு கலவாமல் !!!
நீ உதிர்த்த
எல்லா சொற்களையும்
சிந்தாமல் சிதறாமல்
ஒரு மூலைகூட மடங்காமல்
புத்தகமாக்கி
சேமித்து வைத்திருக்கிறேன்
என் மனப் பையில்....
அவசர அவசரமாக மேய்ந்துவிட்டு
ஆற அமர அசைபோடும்
எருமையாய்
ஒவ்வொன்றாக
சுவைத்தபோதுதான் தெரிந்தது!!
அரிதாரம் அணிந்திருந்த அவை
சொற்கள் அல்ல..
ஒவ்வொன்றும் தங்க முலம் பூசிய
சயனைடு குப்பிகள் என்று....
உன் வார்த்தைகளால்
வாழ்விழந்த
இறுதி மனம்
என்னுடையதாக இருக்கட்டும் !
இனியாவது இதழ்களை மட்டும்
பேச விடு
உன் உள்ளத்து நஞ்சு கலவாமல் !!!
"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல் வாரடி! - கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி!"
ReplyDeleteஇது அறிந்த கவிதாயினி நீ... இதற்கெல்லாம் மனங்கலங்கலாமா...?
வாழ்த்தை வஞ்சகர்கள் வாழ்க்கை சிறந்ததாய் சரித்திரமில்லை..மனம் நிமிர் ... நீ வெல்வாய்...!
கலை
உள்ளொன்று புறமொன்று வெவ்வேறு காணாத என் தோழா, உன் வாழ்த்தை சிரம் தாழ்த்தி ஏற்கின்றேன் என்றென்றும். நன்றி தோழா.
ReplyDelete