கருப்பு நிலாவில்
உடல் வழிந்து ஓடுகின்ற
உதிரத்தின் அலங்கோலம்
தெருவெங்கும்
வெள்ளைப்பூசனியின்
கருச்சிதைவு!
சிதைக்காமல் தனை ஈன்ற
பெற்றோர்க்கு
மகன் ஆற்றும் நன்றி!
எள்ளுடன் உருட்டிய
வெள்ளைச் சோற்றுடன்
நீர்க்கடன்!
பெண்ணென்று தெரிந்ததனால்
கருச்சிதைவும்
ஸ்கேன் அன்று
சொல்லாமல் விட்டதனால்
முழுச்சிதைவும்
ஆன மகள்
என்செய்வாள்?
பரிகாரம் யார் செய்வார்??
ஆதிரா..
அருமை!!
ReplyDeleteதங்கள் படைப்புகளைப்ப படிக்க சிறு தடையுள்ளதே!!
தங்கள் வலைப்பதிவு வரும்போது ...
பெரியோருக்கு மட்டும் என்ற அறிவுறுத்தல் வருகிறேதே பார்த்தீர்களா?
அமைப்பில் சென்று மாற்றிவிடலாமே?
என் குடிலுக்கு வருகை புரிந்த முனைவர் குணசிலன் அவர்களுக்கு அன்பு வணக்கம். கருத்து வழங்கியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.பெரியோருக்கு மட்டும் என்ற அறிவுறுத்தலை உடனே மாற்றி விட்டேன். நன்றி மீண்டும்.ஒரு குறிப்பு நேற்று முழுவதும் தங்கள் வலைப்பதிவில் உலாவி சங்க காற்றை மாந்தி மகிழ்ந்தேன். இன்றும் உலாவ வரும்.... அன்புடன்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி!!
ReplyDeleteவலைப்பதிவர் சுயவிவரம் சென்று விரிவுரையாளர் என்னும் குறிச்சொல் வழியே தங்களின் வலைப்பதிவை அடையாளம் கண்டுகொண்டேன்..
கல்விப்புலம் சார்ந்த பதிவர்களைப் பார்ப்பதே அரிது..
தங்களைப் போன்றவர்களின் பணி எதிர்காலத் தலைமுறையினருக்குத் தேவை!!
தாங்கள் எனது பதிவு வந்து கருத்துரையிட்டமைக்கு மகிழ்ச்சி..
தொடர்ந்து எழுதுங்கள்..
தமிழால் இணைவோம்..
மொழியை வளர்ப்போம்..!
பெண்ணுக்குநேரிந்த பூவுலகில் யாதுண்டு...?
ReplyDeleteகண்களாம் அவள்ள் இவ்வுலகின் வழிகாட்டி..
புதைந்து போன பிறவிகளைப்
புதுப்பிக்கும் பிரம்மா அவள்...
கருச்சிதைவால் இவ்வுலகை
கலங்கிடச்செய்யாதீர்...
முழுச்சிதைவால் இவ்வுலகை
முடித்துவிட எண்ணாதீர்..
மிக அருமையான படிமப்பரிசு ஆதிரா...!
வாழ்த்துகள்...!
தங்கல் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கலை.
ReplyDeleteஎன்னை அடையாளம் கண்டுகொண்டமைக்கும் மறுமுறையும் வந்து கருத்துரை வழங்கியமைக்கும் என் மனமார்ந்த நன்றி திரு குணா அவர்களே..
ReplyDelete