Sunday, March 14, 2010

மோகச் சிறுகதையின் முடிவுரை...



















முத்த மழையின்

எச்சமாய் அரும்பிய

தேகச் சிப்பியின்


நித்திலம்


கட்டில் போரின்

வெற்றிச் சின்னமாய்

இருவர் பாடிய

தொட்டில் வாகை


நிலவொளி சூட்டில்

கருவறை வயலில்

காதலன் விதைத்த

உயிர்ப் பயிர்


மெய்யும் மெய்யும்


தொட்டு இசைத்ததில்

உயிர் கொண்டெழுந்த

பிள்ளைத் தமிழ்


விந்தச் சாரல்

சந்தனத் தீவில்

ஓடிக் கலந்த

வசந்த ருது


மோகச் சிறுகதையின்

முடிவில் முகிழ்த்த

கால்கை கொண்ட

சிற்றிதழ்



பாயல் தேசம்

பகிர்வுடன் நடத்திய

அங்கக் குலுக்களின்

பம்பர் பரிசு






ஆதிரா










ஆதிரா..

6 comments:

  1. நான் எத்தனையோ மழலை பற்றிய கவிதைகள் வாசித்துள்ளேன். ஆனால் இது வரை இத்தனை பரிமாணங்களுடன் மழலையின் உருவாக்கமும் கருவாக்கமும் கண்டதில்லை என்றே கூற வேண்டும்.

    ஆதிராவின் கை வண்ணத்தில் சொற்கள் கோலாட்டம் இடுகின்றன...

    குறிப்பாக இந்த வரிகள் :

    முத்த மழையின்
    எச்சமாய் அரும்பிய
    தேகச் சிப்பியின்
    நித்திலம்

    கட்டில் போரின்
    வெற்றிச் சின்னமாய்
    இருவர் பாடிய
    தொட்டில் வாகை

    மேலும் இந்த வரிகள் :

    மோகச் சிறுகதையின்
    முடிவில் முகிழ்த்த
    கால்கை கொண்ட
    சிற்றிதழ்


    உண்மையிலே நேரில் இருந்திருந்தால் இக்கவிதை எழுதிய ஆதிராவின் கைகளுக்கு கண்டிப்பாக மரியாதை செய்து இருப்பேன். ஹாட்ஸ் ஆஃப் ஆதிரா... பாராட்ட வார்த்தைகள் போதவில்லை தோழியே...!

    கலை

    ReplyDelete
  2. நெஞ்சுக்குழியில் வார்த்தைகளின் மிதியல்
    மௌனமே எஞ்சுகிறது இக்கவிதையை புகழ எண்ணி..

    ReplyDelete
  3. உன் பாராட்டைக் கேட்டு என் நெஞ்சக்குழியிலிருந்து கிளம்பி வருகிறது நன்றி என்ற உணர்வலைகள், தென்றலாக உன்னை மெல்லத்தழுவி முத்தமிட. நன்றி தீபிகா.

    ReplyDelete
  4. தங்கள் அன்பான வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி கலை அவர்களே

    ReplyDelete
  5. பாயல் தேசம்

    பகிர்வுடன் நடத்திய

    அங்கக் குலுக்களின்

    பம்பர் பரிசு

    வரிகளோடு வாழ்கையை ,இணைத்து,
    இரு உடல்கள் கொண்ட உறவுக்கு,
    உரிமைப்பத்திரம்,உங்கள் கவிதை !
    உறவுகள் உரிமை கோரினாலும்,
    இறைவன் தந்தால் தான், தானே இந்த,
    பம்பர் பரிசு!


    அழகிய வரிகள் !
    பாராட்ட வார்த்தைகளில்லை

    ReplyDelete
  6. //உறவுகள் உரிமை கோரினாலும்,
    இறைவன் தந்தால் தான், தானே இந்த,
    பம்பர் பரிசு!//

    சத்திய வாக்கு... ஏன் இப்படி பதிவிட்டீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் சத்தியம்.
    எல்லோர்க்கும் கிடைப்பதில்லை. கிடைத்தால் அதுதானே பம்பர் பரிசு. அதனால் தான் எழுதினேன்.

    வார்த்தைகளின்றியே இத்தனை அழகான பாராட்டு... இன்னும் வார்த்தைகள் இருந்தால்.... நெஞ்சுக்குழியில் வார்த்தைகள் சிக்கிகொண்டு வர மறுக்கிறது நன்றி சொல்ல..

    ReplyDelete