Sunday, March 14, 2010

வெடிக்கும் முன்னே....

ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற
ஒற்றைப் பனைமரம் நான்!உரசினாலும் பற்றாத
வெற்றுத் தீக்குசிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!
என்றாலும்
துளைஈ இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்
புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம்
தான் கூடாதா?
அன்றாடம்
பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாளையா நான்?
பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....
எச்சரிக்கிறேன்!!!!!!
மாற்றான்(ண்) விரல்பட்டு
வெடிக்கும் முன்னே
அணைத்து விடு!!!!!!!


ஆதிரா..

3 comments:

  1. பருவம் கடந்தும் பூத்துக்குலுங்காத பேரிளம்பெண்ணின் சோகம் விவரிக்கும் இந்த கவிதை அழகான சொல்நயஙகளால் வசீகரிக்கிறது..

    மாற்றார் கைபடும்முன் பறித்துப்போக தன் உற்றானின் வரவை நோக்கும் அந்த காரிகையின் கோரிக்கை கண்முன் வந்து சோகம் பிழிகிறது...

    அன்றாடம் வேலைப் புயலில் சிக்குண்டு சீரழியும் எண்ணற்ற பெண்களின் நிலையை இதைவிட கடுமையாக கூற முடியுமா என்பதை வியக்கிறேன்...

    அருமையான கவிதை ஆதிரா....! உங்கள் கவிச்சிறப்பு என்னை வசீகரிக்கிறது.

    வாழ்த்துகள்...!

    கலை

    ReplyDelete
  2. தங்கள் பாராட்டுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி கலை.

    ReplyDelete
  3. மிக்க நன்றி தமிழினி அவர்களே.. இணைக்கிறேன்.விரைவில்..

    ReplyDelete